கேரளாவைச் சேர்ந்த சனீத் என்ற இளைஞர், இளைஞர்களிடையே போதைப்பொருளுக்கு எதிரான “போதைப்பொருளுக்கு நோ சொல்வோம்” என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வினோதமான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இவர் தனது மிதிவண்டியில் முன்பக்கச் சக்கரத்தை அகற்றிவிட்டு, ஒரே ஒரு சக்கரத்தின் மீது மட்டும் சமநிலைப்படுத்தி 7,000 கிலோமீட்டருக்கும் அதிகமாகப் பயணம் செய்துள்ளார். தற்போது கேரளாவில் இருந்து நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் பேஸ் கேம்ப் நோக்கித் தனது பயணத்தைத் தொடர்கிறார்.
சிவில் இன்ஜினியரிங் மற்றும் இன்டீரியர் டிசைனிங் படித்தவரான சனீத், கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக மிதிவண்டி சாகசங்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும், இந்திய ராணுவ வீரர்களுக்கு அணிவகுப்பு சாகசப் பயிற்சிகளையும் வழங்கி வருகிறார். நாளொன்றுக்கு சராசரியாக 50 முதல் 60 கி.மீ வரை பயணிக்கும் இவர், பலத்த காற்று வீசும் நேரங்களில் முன்பக்கச் சக்கரம் இல்லாத வண்டியைச் சமநிலைப்படுத்தி ஓட்டுவது மிகவும் கடினமான சவாலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சனீத்தின் இந்தச் சாகசப் பயணத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள் பலவிதமான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சிலர் இவரின் முயற்சியைப் பாராட்டினாலும், சிலர் நகைச்சுவையாக “இரண்டு சக்கரங்கள் கொண்ட வண்டியைத் தான் ‘பை-சைக்கிள்’ என்பார்கள், முன்பக்கச் சக்கரம் இல்லையென்றால் அதை எப்படி பை-சைக்கிள் என்று சொல்வது?” என்றும், “போதைப்பொருள் பயன்படுத்துபவர்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இவர் இப்படிப் பயணிக்கிறாரோ” என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டம், மார்க்குகு மண்டலத்தைச் சேர்ந்த போத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான ராம் சரண். இவர்…
கன்னோஜ் மாவட்டம் குர்சஹாய்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில், 32 வயதான சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி ஷிகா ஆகியோர்…
நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள மதுபானக் கடையில் பணியாற்றி வந்த 39 வயது ஊழியர் ஒருவர், நெஞ்சில் ஆணி பாய்ந்து…
அமிர்தசரஸில் இருந்து வெளியான நெகிழ்ச்சியான சிசிடிவி காட்சி ஒன்று இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சரண்ஜித்…
கோட்டயம் மாவட்டத்தில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நிற்காமல் அதிவேகமாக வந்த டொயோட்டா இன்னோவா கார், பல வாகனங்கள் மீது…
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், தடுக்க வந்த மற்றொரு நண்பர் கத்தியால்…