இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மை உணர்ச்சி வசப்பட வைக்கும் வகையில் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது கேரளாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் பதிவு செய்த இந்த வீடியோவில், கண் பார்வையை இழந்த முதியவர் ஒருவர் பேருந்தில் தளர்ந்த கைப்பிடியை அமைதியாக சரி செய்யும் தருணம் பதிவாகியுள்ளது.
அவருடைய செயல்தான் சமூக வலைத்தளத்தில் மனிதநேயம் என்ற வார்த்தைக்கு புதிய வரையறையை அளித்துள்ளது. பயணத்தின் போது கைப்பிடி தளர்ந்து இருப்பதை கண்ட அந்த முதியவர் நானும் ஒரு பயணி என்ற பொறுப்புணர்வுடன் அதனை சரி செய்வது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பொது சொத்துக்கு தனிப்பட்ட பொறுப்புணர்வு கொண்டு நடந்து கொள்ளும் இந்த செயல்முறை பலரையும் வியக்க வைத்துள்ளது. ஒரு சாதாரண குடிமகன் செய்த இந்த ஒரு சின்ன செயல் பெரிய பாடமாக மாறி உள்ளது. கண்பார்வையற்ற முதியவர் இப்படி ஒரு செயலை செய்தது சமூக வலைத்தளத்தில் ஆயிரக்கணக்கானோரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
