மலையாளத்தில் முதன் முதலாக நடித்து அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினிமுருகன், ரெமோ உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கினார். அதை தொடர்ந்து சூர்யா, விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கின்றார்.
தமிழ், தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக வளம் வந்த இவருக்கு சமீப காலமாக வெற்றி படங்கள் அந்த அளவுக்கு அமையவில்லை. தெலுங்கில் இவர் நடித்த மகாநடி திரைப்படம் இவருக்கு தேசிய விருதை வாங்கி கொடுத்தது. இருப்பினும் அடுத்தடுத்து திரைப்படங்கள் இவருக்கு சரியாக அமையாத காரணத்தால் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றார். இருப்பினும் தனது கையில் அரை டிசைன் படங்களை வைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் ரகு தாத்தா என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.
#image_title
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நீண்ட கால காதலரான மற்றும் தனது குழந்தைப் பருவ நண்பரான துபாயை சேர்ந்த ஆண்டனி என்பவரை திருமணம் செய்யவுள்ளார். இவர்களின் திருமணம் கொச்சியில் டிசம்பர் மாதம் அந்தந்த குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன் நடைபெற உளது. இவர்கள் கல்யாண தேதி மற்றும் இடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் நடிகையிடமிருந்து வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தனது காதலர் ஆண்டனியை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தினார் கீர்த்தி சுரேஷ்.
#image_title
15 ஆண்டுகளாக தாங்கள் காதலித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் காதலர் ஆண்டனி தட்டிலுக்கு 34 வயதாகிறது. கீர்த்தி சுரேஷை விட 2 வயது பெரியவர். இவர் ஒரு என்ஜினியர். இவர் கொச்சியில் venetian blinds பிசினஸ் செய்து வருகிறாராம். மேலும் ஹாஸ்பிடாலிட்டி பிசினஸிலும் இருக்கிறாராம். சென்னை, கேரளா தவிர்த்து துபாயிலும் பிசினஸ் செய்து வருகிறாராம்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…