அமைச்சரவையில் அதிரடி நீக்கம்?…. கீர்த்தனாவை கழட்டிவிட்ட விஜய்…. தமிழக அரசியலை உலுக்கும் ‘லண்டன் பிளான்’… காலையிலேயே பரபரப்பு…!

Spread the love

முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவருடன் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா செல்லாதது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கட்சிக்குள்ளேயே ஏற்கெனவே அமைச்சர் கீர்த்தனா மீது முதலமைச்சருக்கு முழுமையான நம்பிக்கை இல்லை என்ற கருத்து நிலவி வந்த சூழலில், இந்த லண்டன் பயணத்தில் அவர் புறக்கணிக்கப்பட்டது அவரது பதறியைப் பறிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. முதலீட்டாளர்கள் சந்திப்பு போன்ற முக்கியமான நிகழ்வில் தொழிற்துறை அமைச்சர் உடன் இல்லாதது, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே இந்த ஊகத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும், இந்த ஊகங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு தரப்பில் மாற்று விளக்கம் முன்வைக்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு முக்கிய தொழிற்துறை திட்டங்களையும் புதிய முதலீட்டு பணிகளையும் உள்ளூரிலேயே இருந்து விரைந்து கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அமைச்சருக்கு இருப்பதாகவும், அதன் காரணமாகவே அவர் இந்தப் பயணத்தில் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ மறுப்புகள் ஒருபுறம் இருந்தாலும், அமைச்சரவையில் மாற்றம் வரவிருப்பதாக பரவும் தகவல்கள் தற்போதைக்கு அமைதியாவதாகத் தெரியவில்லை.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

54 minutes ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

1 மணத்தியாலம் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

1 மணத்தியாலம் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

1 மணத்தியாலம் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

1 மணத்தியாலம் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

2 மணத்தியாலங்கள் ago