#image_title
சின்னி ஜெய்ந்த் தமிழ் சினிமாவில் பணியாற்றிய திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், மிமிக்ரி கலைஞர் மற்றும் டப்பிங் கலைஞர் ஆவார். இவர் தரமணியில் உள்ள தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் முறையாக நடிப்பு படிப்பை கற்று தேர்ந்தவர்.
1984 ஆம் ஆண்டு இயக்குனர் மகேந்திரன் இயக்கிய கை கொடுக்கும் கை திரைப்படத்தில் வில்லனின் துணை வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரின் தனித்துவமான நகைச்சுவை பானியும் உடல் அசைவுகளாலும் பிரபலமானார் சின்னி ஜெயந்த். நகைச்சுவையில் கில்பான்ஸ், சில்பான்ஸ் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியவர் சின்னி ஜெயந்த். வில்லன் கதாபாத்திரத்தில் இருந்து மெல்ல மெல்ல கதாநாயகனின் நண்பனாக துணை கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார் சின்னி ஜெயந்த்.
கீழ்வாசல், இதயம், கண்ணெதிரே தோன்றினாள் மற்றும் சின்ன புள்ள ஆகிய திரைப்படங்களில் இவரது நடிப்பு அபாரமாக இருக்கும். இதன் மூலம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். சின்னப்புள்ள திரைப்படத்தில் நடித்தது இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதற்கு பிறகு காதலர் தினம் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சின்னி ஜெயந்த். இது மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் சின்னி ஜெயந்த்.
2000 ஆம் ஆண்டு உனக்காக மட்டும் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சின்னி ஜெயந்த். பின்னர் 2007 ஆம் ஆண்டு கானல் நீர் 2019 நீயே என் காதலே ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். திரைப்படங்களில் மட்டுமல்லாது சின்னத்திரை சன் டிவி தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு, சகலை வெர்சஸ் ரகளை ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் பிரபலமானவர் சின்னி ஜெயந்த்.
சின்னி ஜெயந்த் அவர்களின் மகன் ஜெய் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று விழுப்புரம் மாவட்டத்தின் கலெக்டராக பணியாற்றி இருக்கிறார். இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. அப்போது திருமணத்தில் கவுண்டமணி கலந்து இருக்கிறார். திருமணத்திற்கு வந்தபோது கவுண்டமணி தன்னிடம் பேசியதை ஒரு நேர்காணலில் சின்னி ஜெயந்த் ஓப்பனாக கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், என் மகனின் கல்யாணத்துக்கு கவுண்டமணி வந்திருந்தார். அவர் எனக்கு நெருங்கிய நண்பர். என்னிடம் வந்து காலரை தூக்கி விட்டுக்கோ ஒரு நகைச்சுவை நடிகர் மகனின் திருமணம் இவ்வளவு கிராண்டா இதுவரை நடந்ததில்லை. உன்னை பார்க்கும் போது எனக்கு பெருமையா இருக்கு என்று கூறினார் என்று பகிர்ந்துள்ளார் சின்னி ஜெயந்த்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…