#image_title
H வினோத் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் ஆர் பார்த்திபன் மற்றும் விஜய் மில்டணிதம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பச்சை குதிரை மற்றும் கோலிசோடா ஆகிய படங்களிலும் பணியாற்றி இருக்கிறார் H வினோத்.
2014ஆம் ஆண்டு மனோபாலா தயாரித்த சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் H வினோத். முதல் படத்தின் மூலமாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து புகழ்பெற்றார் H வினோத். ஏனென்றால் அப்படி ஒரு வலுவான கதை அம்சத்தை சதுரங்க வேட்டை திரைப்படம் கொண்டிருந்தது. படம் முழுக்க முழுக்க விறுவிறுப்பு இருந்தது. இந்த திரைப்படம் மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
2017 ஆம் ஆண்டு தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை இயக்கினார் H வினோத். இத்திரைப்படம் சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருதை அவருக்கு பெற்று தந்தது. அடுத்ததாக நடிகர் அஜித்துடன் இணைந்து தொடர்ந்து மூன்று படங்கள் இயக்கினார் H வினோத். அது 2019 ஆம் ஆண்டு நேர்கொண்ட பார்வை 2022 ஆம் ஆண்டு வலிமை 2023 ஆம் ஆண்டு துணிவு ஆகிய படங்கள் ஆகும்.
இந்த வெற்றிகரமான திரைப்படங்களை இயக்கிய பிறகு தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார் H வினோத். தற்போது நடிகர் விஜயின் 69ஆவது திரைப்படத்தை இயக்கயிருக்கிறார் H வினோத். இதுதான் நடிகர் விஜயின் கடைசி படம் என்றும் கூறப்படுகிறது. அதனால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட H வினோத் அவர்களிடம் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? நீங்கள் நம்புகிறீர்களா? இல்லையா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த H வினோத் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை விட அவர் நமக்கு தேவைப்படுகிறாரா இல்லையா என்பதை பார்க்க வேண்டும். எனக்கு ஒரு பிரச்சனையை முடிக்கிறதுக்கு ஒரு பவரா தான் நான் கடவுளை பார்க்கிறேன். எப்படி நம்ம மேக்ஸ்ல கணக்கு போடும்போது எக்ஸ்ன்னு ஒன்னு வச்சு கண்டுபிடிப்போமோ அது மாதிரி தான். நான் கடவுளை கும்பிடுவதனால் யாருக்கும் எந்த பிரச்சனையுமே இல்ல. அதனால ஒரு சில பிரச்சினைகளை தீர்க்கறதுக்கு ஒரு சப்போர்ட் மாதிரி நான் கடவுளை வைத்திருப்பேன் என்று கூறியிருக்கிறார் H வினோத்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…