கரூரில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் வருத்தமோ, மணிப்போ கேட்கவில்லை. நடக்க கூடாதது நடந்து விட்டது, கிட்டத்தட்ட ஐந்து மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டோம், ஆனால் கரூரில் மட்டும் இது எப்படி நடந்தது, மக்களுக்கு எல்லா உண்மைகளும் நன்றாக தெரியும், விரைவில் எல்லா உண்மைகளும் வெளியே வரும் என தெரிவித்திருந்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கட்சியின் தலைவராக இருந்து கொண்டு இரங்கல் கூட்டத்தை கூட விஜய் அறிவிக்கவில்லை. உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குகளிலும் அவர் பங்கேற்கவில்லை. இது சாமானிய மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் முன்னாள் எம்எல்ஏவும் நடிகருமான எஸ்வி சேகர் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது, கரூரில் 41 பேர் உயிரிழந்த பிறகு மூன்று நாட்களுக்குப் பின் வருத்தமான முகத்துடன் விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று விஜய் உருக்கமாக பேசிய வீடியோவை நடிப்பாகவே பார்க்க வேண்டி உள்ளது.
ஏனென்றால் ஒரு கூட்டம் மட்டுமே ஓட்டாக மாறிவிடும் என்ற தவறான கருத்தில்தான் கூட்டம் கூட்டப்பட்டது. பத்தாயிரம் பேர் வருவார்கள் என்று எழுதிக் கொடுத்துவிட்டு 25,000 பேர் வந்தால் தமிழக வெற்றி கழகம் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். கூட்டத்தை கட்டுப்படுத்த தெரிந்தவர்கள் தான் தலைவராக வர முடியும். எதற்கெடுத்தாலும் போலீஸ் செய்ய வேண்டும் என்றால் அவர்களுக்கு தமிழக வெற்றி கழகம் ஒத்துழைப்பு கொடுத்திருக்கும். எல்லாத்தையும் அரசு மீது குற்றம் சாட்டி விட்டு தப்பிக்க முயல்வது கண்டனத்திற்குரிய குற்றம்.
தன்னை பார்க்க வந்தவர்கள் உயிரிழந்து விட்டார்கள் என்று தெரிந்த பிறகு அவசரமாக சென்னை திரும்பி இருக்கக் கூடாது. அரசு மீது குற்றம் சுமத்த கூடாது. அரசியலின் முதல் பாடத்தை மிகப்பெரிய விலை கொடுத்து விஜய் வாங்கியுள்ளார். இந்த விவகாரத்தில் மற்றவர்களை குற்றம் சொல்வதில் எந்த அர்த்தமும் கிடையாது. மன்னிப்பு கேட்க தெரிந்தவன் தான் பெரிய மனுஷன். குழந்தைகளை இழந்தவர்களிடம் என்ன ஆறுதல் கூற போகிறீர்கள்? 25 லட்சம் கொடுத்து விட்டால் பத்து வயது குழந்தையை உங்களால் திரும்ப கொடுக்க முடியுமா? நடிகனை பார்க்க கூட்டம் வரும் தான்.
விஜய் அவரின் வாழ்க்கையில் என்ன செய்திருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். நல்ல மனிதன் என்ற பெயரை விஜய் எடுக்க வேண்டும். சிஎம் சார் என்னை கைது செய்யுங்கள் என்று கூறுகிறார். நிச்சயம் முதல்வர் விஜயை கைது செய்ய மாட்டார். அரசியலில் ஆறாவது முறையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுகவை எதிர்த்து விஜய் அரசியல் செய்து கொண்டிருக்கிறார் என்று எஸ் வி சேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…