கரூரில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய், செந்தில் பாலாஜியை மறைமுகமாகத் தாக்கிப் பேசியது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஊரை அடித்து உலையில் போட்ட கரூர் கம்பெனிக்காரர் ஓடிவிட்டார்; அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை” என்று விமர்சித்த முதலமைச்சர் விஜய், “ஓடு ஓடு ஓடு… வரான் பாரு வேட்டைக்காரன்” என்ற தனது சினிமாப் பாடலைப் பாடி செந்தில் பாலாஜியைக் கடுமையாகக் கிண்டலடித்தார். முதலமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சுக்கு அரசியல் அரங்கில் விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
முதலமைச்சர் விஜய்யின் இந்த விமர்சனத்திற்கு செந்தில் பாலாஜி தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் மிகக் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடந்த துயரச் சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், “பாதிக்கப்பட்ட எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்? செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்து, அவர்களின் உயிரைக் காத்தது அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும்தான்” என்று தனது பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முதலமைச்சர் விஜய்யை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ள செந்தில் பாலாஜி, “அன்றைய கூட்டத்தில் பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல் தனது பேச்சைத் தொடர்ந்து பேசியது யார்?” என்று சாடியுள்ளார். அத்துடன், திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்க்காமல் தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்று குறிப்பிட்டு, முதலமைச்சரின் பாணியிலேயே “ஓடு… ஓடு… ஓடு…” எனப் பதிவிட்டு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இந்திய வரலாற்றையே உலுக்கிய 2006-ஆம் ஆண்டின் 'நிதாரி தொடர் கொலை வழக்கு' குற்றவாளியான சுரேந்தர் கோலி, ஹரித்வாரில் உயிரிழந்ததாக வெளியான…
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு மலைப் பகுதியில் செப்டம்பர் 16 அன்று மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. மலையிலிருந்து சரிந்து…
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு தகவலாகும். லாகோஸில் உள்ள ஸ்விஃப்ட்-மெட் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போக்குவரத்து…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை அருகே, குடும்பத் தகராறு காரணமாக மனைவியை குடும்பம் நடத்த அழைத்தபோது ஏற்பட்ட…
வடமேற்கு டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு,…
பூமியிலிருந்து பார்க்கும்போது அமைதியாகக் காட்சியளிக்கும் நிலவில், கடந்த 2024-ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய விண்வெளி மோதல் நிகழ்ந்துள்ளது. 2024 ஏப்ரல்…