“4 பேர் ட்வீட் போட்டா அதுதான் விமர்சனமா..?” படத்தை பார்க்காமலே சொல்றாங்க…! சோஷியல் மீடியா நெகட்டிவ் விமர்சகர்களுக்கு கார்த்திக் சுப்புராஜ் காட்டமான பதிலடி…!!

Spread the love

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனத், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டோரதி’ திரைப்படத்திற்குச் சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்து பரவி வருகின்றன. இந்நிலையில், மதுரையில் தியேட்டரில் மக்களுடன் படம் பார்த்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், சோஷியல் மீடியா எதிர்மறை விமர்சனங்கள் குறித்துத் தனது காட்டமான பதிலடியைப் பதிவு செய்தார்.

ட்விட்டர் தளம் என்பது மிகவும் சிறிய உலகம் என்றும், அதில் யாரோ நான்கு பேர் பதிவிடும் நெகட்டிவ் கருத்துக்களை மட்டுமே பெரிதுபடுத்திப் பேசுவது நியாயமில்லை என்றும் அவர் கூறினார். தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் பெரும்பாலான சினிமா ரசிகர்கள் படத்தைப் பாராட்டி வருவதாகவும், இணையத்தில் பலர் படத்தைப் பார்க்காமலேயே தவறான பரப்புரைகளைச் செய்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, 1990-களின் கதைக்களத்தில் வரும் ‘ஜீவா’ என்ற திருநங்கை கதாபாத்திரம் பேசும் வசனம் குறித்த சர்ச்சைக்குப் பதிலளித்த அவர், “எங்களை மனிதனாகக் கூட மதிக்காமல் இருக்கிறீர்கள், ஆனால் இன்னும் பத்து வருடங்களில் எங்களை மரியாதையோடு பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள் என்ற அந்த வசனத்தின் சூழலையும் அர்த்தத்தையும் புரிந்துகொள்ளாமல் விமர்சிக்கிறார்கள். இன்று சமூகத்தில் அந்த மாற்றம் நடந்துள்ளது, திருநங்கைகளுக்கான மரியாதை கிடைத்து வருகிறது என்பதைத்தான் படத்தில் காட்டியிருக்கிறோம்” எனக் கூறித் தேவை இல்லாமல் கிளப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Devi Ramu

Recent Posts

“இனி அதுக்கு வாய்ப்பே இல்ல”…. ஸ்டாலின் எடுத்த அந்த ஒரு முடிவு… சீனியர்களுக்கு பறந்த உத்தரவு…. உளவுத்துறை ரிப்போர்ட்டால் உறைந்துபோன திமுக….!

திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியைத் தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்கச் செய்யும் நோக்கில், கட்சி அமைப்புகளில் அதிரடியான மறுசீரமைப்புப் பணிகளை…

3 minutes ago

தனுஷ் அரசியல் எண்ட்ரி உறுதி?…. 2028-ல் கட்சி தொடக்கம்… 2031 சட்டமன்றத் தேர்தல் மாஸ்டர் பிளான்… தமிழக அரசியலை உலுக்கும் சீக்ரெட் தகவல்…!

நடிகர் தனுஷ் தனது பிறந்தநாள் விழாவில் ரசிகர்களைச் சந்தித்து உரையாற்றியபோது, "நாம் அடுத்த இடத்திற்குச் செல்ல வேண்டும், மக்கள் பணியாற்றுங்கள்,…

10 minutes ago

வேங்கைவயல் அதிர்ச்சி ஓயல…. இப்போ பழனி பள்ளியில் அசிங்கம்…. பிஞ்சு குழந்தைகள் குடிநீரில் மலம் கலந்த கொடூரம்…!

தமிழகத்தில் குடிநீர் ஆதாரங்களில் மனிதக் கழிவுகள் கலக்கப்படும் கொடூரச் செயல்கள் தொடர்வது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் விடுக்கப்பட்ட தலைகுனிவாகும். கடந்த ஆண்டு…

18 minutes ago

BREAKING: திடீர் திருப்பம்…. சுப்பராயன் மகனின் அதிரடி அரசியல் என்ட்ரி…. அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைந்த ‘நவீன மனிதர்கள்’ அமைப்பு…..!

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், 'நவீன மனிதர்கள்' அமைப்பின் தலைவர் பாரதி சுப்பராயன் தலைமையில் அதன்…

29 minutes ago

“கடைக்கு போறேன்னு சொல்லிட்டு இங்கயா?”…. உ.பி-யில் காதலனுடன் உலா வந்த மனைவியை சுட்டுத் தள்ளிய கணவன்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், திருமணத் திற்குப் புறம்பான உறவுச் சந்தேகத்தின் பெயரில் கணவனே தனது மனைவியையும் அவரது ஆண்…

34 minutes ago

அதிர்ச்சி..! கனவுகளோடு மாணவி… நடன மேடையில் ஜொலித்த பெண்… விவேக் எக்ஸ்பிரஸில் நடந்த பயங்கரம்… தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்த சோகம்…!!

கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அசாமிலிருந்து நடனக் குழுவினருடன் விசாகப்பட்டினம் சென்ற குவாஹாட்டி பி. பருவா கல்லூரி மாணவி ஹிமாஸ்ரீ…

40 minutes ago