Categories: சினிமா

அக்கா, தங்கை இருவரையும் திருமணம் செய்த நடிகர் கார்த்திக்…! நவரச நாயகன் சர்ச்சை நாயகனாக மாறிய கதை

Spread the love

நடிகர் கார்த்திக், நவரச நாயகன் என்ற பட்டப் பெயருக்கு ஏற்ப, தமிழ் படங்களில் தனது நடிப்பில் நவரச தன்மையை பிரதிபலிக்கும் சிறந்த நடிகர். நடிகர் முத்துராமனின் மகன் என்ற பெருமைக்கு உரியவர். பாரதிராஜா இயக்கத்தில், அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்தாா். தொடர்ந்து நல்ல கேரக்டர்களில் நடித்து ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக சிறந்த நடிகராக பார்க்கப்பட்டார். இவரது அழகில் மயங்கிய கல்லூரி மாணவியர் மற்றும் இளம் பெண்களுக்கு கனவு நாயகனாக இருந்தார்.

ஊட்டியில், சோலைக்குயில் என்ற படத்தில் நடித்த போது அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ராகினி என்ற படுகாஸ் இன பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்தை தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி நடத்தி வைத்தார். அடுத்த சில ஆண்டுகளில், ராகினியின் தங்கையையும் கார்த்திக் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இதுபற்றிய தகவல் பல ஆண்டுகள் வெளியில் தெரியவில்லை. ஒரு கட்டத்துக்கு பிறகு மீடியாவில் தகவல் கசிந்த போது, என் முதல் மனைவி ராகினியின் முழு சம்மதத்தோடு, அவரது தங்கையை 2வதாக திருமணம் செய்துகொண்டேன், என ஒத்துக்கொண்டார்.

சினிமாவில் ஏறுமுகத்தில் இருந்த நடிகர் கார்த்திக், நவரச நாயகன் என்ற பெயருக்கு எதிராக சர்ச்சை நாயகன் என்ற நிலைக்கு அவரது குணத்தால், நடவடிக்கைகளால் மாறினார். குறிப்பாக அதிக மதுப்பழக்கம், ஷூட்டிங்குக்கு மணிக்கணக்கில் தாமதமாக வருவது, சில நாட்களில் வராமலேயே ஓட்டலில் இருந்து விடுவது, பெண் நடிகைகள் பலருடன் சகவாசம், நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுக்க தவறியது, நல்ல பட வாய்ப்புகள் வந்தும் அதை உதாசீனப்படுத்தியது, ஜாதி பெயரால் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு கட்சி துவங்கியது என கார்த்திக் செய்த பல தவறுகள், அவரது வாழ்க்கையில் மைனஸ் பாயிண்டுகளாக அமைந்து விட்டன. இப்போது, அவரது மகன் கவுதம் கார்த்திக் நல்ல நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.

admin

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

5 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

5 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

7 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

7 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

7 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

7 மணத்தியாலங்கள் ago