34 வயதே ஆன இளம் கன்னட நடிகரின் திடீர் மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட நடிகர் சந்தோஷ் பாலராஜ் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். கடந்த சில வாரங்களாக மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இவரது உயிர் பிரிந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு சாலை விபத்தில் தந்தை உயிரிழந்த பிறகு சந்தோஷ் பாலராஜ் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய தாயுடன் வசித்து வந்தார். இவரின் தந்தை அனேகல் பாலராஜ் திரைப்பட தயாரிப்பாளர்.
இதன் மூலமாக அவர் சந்தோஷை 2009ஆம் ஆண்டு கெம்பா என்ற திரைப்படத்தின் மூலமாக முன்னணி கதாபாத்திரத்தில் திரைத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கணபா, ஒலவீனாஓலே, ஜன்மா போன்ற படங்களில் நடித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு கரியா -2 என்ற திரைப்படத்தின் மூலம் இவர் மேலும் அங்கீகாரத்தை பெற்றார். இதுவே இவருடைய கடைசி படமாகவே இருந்தது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…