காவிரி நீர் பங்கீடு விவகாரம் காரணமாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தமிழகத்திற்கு நாள்தோறும் 3,500 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்குமுறை குழு உத்தரவிட்டிருந்த நிலையில், தண்ணீர் வழங்க கர்நாடகா தொடர் மறுப்பு தெரிவித்து வருகிறது. இதைக் கண்டித்தும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என வலியுறுத்தியும் பெங்களூரு, மண்டியா, மைசூர் போன்ற பல்வேறு பகுதிகளில் கன்னட அமைப்பினரும் விவசாய இயக்கத்தினரும் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, மண்டியாவில் உள்ள ‘குருஸ்ரீ’ திரையரங்கில் ஒட்டப்பட்டிருந்த தமிழ் திரைப் படத்தின் சுவரொட்டிகள் கிழித்தெறியப்பட்டன. அங்கு திரையிடப்பட்டுள்ள தமிழக முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்தின் போஸ்டர்களை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். காவிரி விவகாரத்தில் எழுந்துள்ள இந்த எதிர்ப்பலைகள், தற்போது கலாச்சார மற்றும் திரையுலகத் தளங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது அம்மாநிலத்தில் வாழும் தமிழர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது. காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு செய்துள்ள மேல்முறையீடு குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. தமிழகத்திற்கு உரிய தண்ணீரைப் பெற்றுத் தர அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், டெல்லி கூட்டத்தின் முடிவு இரு மாநில உறவிலும் மிக முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில், உடல்நலம் குன்றிய கணவரை விட்டுவிட்டு, 50 வயது பெண் ஒருவர் தனது சொந்த…
பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…