Categories: சினிமா

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த கண்மணி மனோகரன் – அஸ்வத் Wedding Reception.. கலந்து கொண்டு வாழ்த்திய திரை பிரபலங்கள்..!!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை கண்மணி மனோகரன்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமான தொடராக மாறியதை தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஒளிபரப்பாகி கடந்த ஆண்டு நிறைவடைந்தது.

இந்த சீரியலை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சென்ற கண்மணி அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

சீரியலில் பிசியாக நடித்து வந்த இவர் இன்ஸ்டாகிராமில் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார்.

இதனிடையே திடீரென தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து காதலிப்பதை உறுதி செய்தார்.

இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இவருடைய காதல் கணவர் பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் வணக்கம் தமிழா போன்ற சில சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அஸ்வத்.

இருவரும் நீண்ட நாள் காதலித்து வந்ததை தொடர்ந்து காதலை பெற்றோரிடம் சொல்லி திருமணத்திற்கு தயாரானார்கள்.

கடந்த இரண்டு மாதங்களாக இவர்களின் திருமண வேலை தடபுடலாக நடந்தது. இவர்கள் தங்களின் திருமண பத்திரிக்கையை நடிகர் விஜய் சேதுபதிக்கும் சூப்பர் ஸ்டார் வீட்டுக்கு சென்று ரஜினியிடம் கொடுத்து ஆசிர்வாதம் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கண்மணி மனோகரனுக்கும் தொகுப்பாளர் அஸ்வந்திற்க்கும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்தது.

திருமணம் தொடர்பான புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் திருமணத்தை தொடர்ந்து கண்மணி மனோகரனுக்கு திருமண வரவேற்பு விழா நடைபெற்று உள்ளது.

அதில் விஜய் சேதுபதி உள்ளிட்ட திரை பிரபலங்களும் சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Nanthini

Recent Posts

BREAKING: திமுக வெற்றி…. சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…. தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…

2 minutes ago

‘மனைவி, 7 வயது மகன் உள்பட 7 பேரை தீர்த்துக்கட்டி…” ஆட்டுக்கல்லால் அடித்து மலை பகுதியில் உடல்களை வீசிய நபர்… நடுங்க வைக்கும் பகீர் வீடியோ…!!

பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த…

8 minutes ago

Real Life Money Heist!… 2 நிமிடத்தில் மாயமான கார்… உள்ளே இருந்த பணம் என்னாச்சு?… CCTV-க்கே தண்ணி காட்டிய பலே திருடர்கள்… நடுங்க வைக்கும் திருட்டு…!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், சினிமா பாணியிலான துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின்…

21 minutes ago

16 ஆண்டு அரசியல் கொள்கைக்கு திடீர் செக்?…. சீமானின் ‘பொது வேட்பாளர்’ மாஸ்டர் பிளான்…. இடைத்தேர்தலில் காத்திருக்கும் டுவிஸ்ட்…!

கடந்த 16 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையாக விமர்சித்து வந்த…

22 minutes ago

“கோடிக் கணக்கில் கொள்ளையா?…. பெரியார் அறிவுலகமா இல்லை ‘ஊழல் உலகமா”….. உலகமே கைகொட்டிச் சிரிக்கும் பகீர் ஊழல்…. கொதித்தெழுந்த முதல்வர் விஜய்….!

கோவையில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட 'பெரியார் அறிவுலகம்' நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக…

28 minutes ago