தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி, தமிழக வெற்றிக் கழகத்தினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பருவமழை காலங்களில் சென்னை போன்ற இடங்களில் தண்ணீர் தேங்குவதைச் சுட்டிக்காட்டிய அவர், ஆட்சிப் பொறுப்பில் உள்ள அரசு முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என விமர்சித்தார். மேலும், கடல் மட்டத்தை விட தாழ்வான பகுதியாக உள்ள தூத்துக்குடியில் மழைநீர் தேங்குவதைத் தவிர்க்க, மேயர் ஜெகன் பெரியசாமி உடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை நேரடியாகப் பார்வையிட உள்ளதாகத் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், தவெகவினரைக் கண்டித்து அண்ணாமலை தெரிவித்த கருத்தைக் குறிப்பிட்டுக் காட்டினார். காக்ரோச் பார்ட்டி மீதான தாக்குதலுக்கு அண்ணாமலை எதிர்ப்புத் தெரிவித்திருப்பது ஆச்சரியமாகவும், நல்ல முன்னேற்றமாகவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். பெண்களை மதிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, தவெகவினர் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பெண்களை இழிவாகவும் தரக்குறைவாகவும் பேசி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
குறிப்பாக, தவெகவினரை எதிர்த்து குரல் கொடுக்கும் பெண் இயக்கத்தினரையும், திமுகவைச் சார்ந்த பெண்களையும் குறிவைத்து அவதூறான பதிவுகள் பரப்பப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். நேற்று தாராபுரத்தில் கார்த்திகா என்ற வேட்பாளர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை இதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டிய கனிமொழி, தமக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அனைத்துப் பெண்கள் மீதும் திட்டமிட்டுத் தரக்குறைவான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பெண்களைப் பாதுகாக்கப் போவதாகக் கூறிக்கொள்ளும் இவர்களின் லட்சணம் இதுதானா என்று கேள்வி எழுப்பினார். மற்றவர்களை இழிவாகப் பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள இவர்களின் இத்தகைய செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது என்பதைச் சுட்டிக் காட்டிய அவர், இது பெண்களின் மாண்பைக் குலைக்கும் செயல் என்றும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…
ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…