சமீபத்திய தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தனது உட்கட்சி அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தோல்விக்கான காரணங்கள் குறித்து பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், வரும் தேர்தல்களில் வெற்றியை உறுதி செய்யும் வகையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் கட்சியின் கட்டமைப்பு மற்றும் நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, கிளைக் கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது வரம்பு 45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பில் நீடிக்க முடியும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சிப் பணிகளை பரவலாக்கும் வகையில் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 70-லிருந்து 110 ஆக உயர்த்தப்பட உள்ளது. மாவட்ட செயலாளர்களுக்கு 70 வயது உச்சவரம்பாகவும், அதிகபட்சமாக 3 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், துணைப் பொதுச்செயலாளராகவும் நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் இருக்கும் கனிமொழி எம்.பி, கட்சியில் மேலும் அதிகாரமிக்க பொறுப்பைக் கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும், முதன்மைச் செயலாளராக கே.என்.நேருவும் பதவி வகித்து வரும் சூழலில், பொதுச்செயலாளர் அல்லது முதன்மைச் செயலாளர் பதவிகளில் ஒன்றை கனிமொழி எம்.பி எதிர்பார்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக மகளிரணி செயலாளராகச் செயல்பட்ட அனுபவம் கொண்ட கனிமொழி எம்.பி-யிடம், கட்சியின் பெண் நிர்வாகிகள் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். கட்சியில் உட்கட்சி மாற்றங்கள் செய்யப்படும்போது மகளிருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும், 33 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் கட்சிப் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்தும் மு.க.ஸ்டாலினிடம் கனிமொழி ஆலோசித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…