Categories: சினிமா

இரண்டாவது நாளே குறைந்த கங்குவாவின் வசூல்.. தயாரிப்பாளர் சொன்னபடி 200 கோடி வசூல் சாதனை படைக்குமா..?

Spread the love

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்டோர் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சண்டைக் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் இயக்கியுள்ள நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோசனை ஒரு மாதத்திற்கு முன்னர் இருந்து படக்குழு தொடங்கிவிட்டது.

அது மட்டுமல்லாமல் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் குறித்து தான் எங்கு பேசினாலும் பெரும் நம்பிக்கையோடு பேசி வந்தார். இதனை பலரும் ஓவர் பில்டப்பாக பார்த்த நிலையில் படம் 2000 கோடிகளை அசால்டாக வசூல் செய்யும் என்றும் படம் ஹாலிவுட் தரத்திற்கு உள்ளது எனவும் கூறினார்கள். பாலிவுட்டில் இந்த படத்தை மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறார்கள். சூர்யா இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் இந்த திரைப்படம் தான் உருவாகியுள்ளது என ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து படத்திற்கு பில்டப் கொடுத்து வந்தனர். சென்னை தொடங்கி மலேசியா வரை படத்தின் ப்ரோமோஷன் நடைபெற்றது.

இப்படியான நிலையில் நேற்று முன்தினம் வெளியாகி கலவையான விமர்சனங்களை படம் பெற்று வருகின்றது.  மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. சூர்யா கொடுத்த பில்டப்பை நம்பி படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. பலரும் படம் குறித்து விமர்சனம் செய்த நிலையில் கங்குவா திரைப்படம் சுமார் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.

ரிலீசுக்கு பிறகு கலவையான விமர்சனங்கள் வருவதால் தயாரிப்பாளர் சொன்னபடி 2000 கோடி வசூல் சாதனை படைக்குமா என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. முதல் நாளில் உலகம் முழுவதும் 58.62 கோடி வசூல் செய்திருந்த நிலையில் சென்னையில் மட்டும் 1.5 கோடி வசூல் செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் சுமார் 1.3 கோடி வசூலுடன் சேர்த்து இரண்டு நாட்களில் மொத்தம் சென்னையில் மட்டும் 2.8 கோடி ரூபாய் கங்குவா வசூல் செய்துள்ளது.

 

Nanthini

Recent Posts

“சரணடையச் சொன்னால் போர் தான்”… அமெரிக்காவை அதிர வைத்த ஈரான் அதிபரின் மாஸ் எச்சரிக்கை… கசிந்த ரகசியத் தகவல்…!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் அமெரிக்காவுக்கு விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை, ஏற்கனவே போர்ப் பதற்றத்தில் இருக்கும் மேற்காசியப் பிராந்தியத்தில் பெரும்…

3 minutes ago

கூகுள் மேப்பிற்கே சவால்..! விவசாயி அசந்து தூங்க.. வழிகாட்ட ஆள் இல்லாமலேயே மாடுகள் வண்டியை இழுத்துச் செல்லும் அதிசயம்… வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு விவசாயி தனது மாட்டு வண்டியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, மாடுகள்…

5 minutes ago

“திமுக தோற்க வேண்டும் என்பதே ராகுலின் திட்டம்”… உண்மையை போட்டுடைத்த அண்ணாமலை… அரசியலில் அடுத்த பரபரப்பு…!

கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, திமுக மற்றும் காங்கிரஸ்…

7 minutes ago

“யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்”… ஈரானுடன் டீல் போட்ட சீனா… ட்ரம்ப்பின் ட்ரூத் சோஷியல் பதிவால் அதிரும் உலக நாடுகள்…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை சீனாவுக்காக நிரந்தரமாகத் திறப்பதாக அறிவித்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

12 minutes ago

“வாடா மோதிப்பார்க்கலாம்” மயில் vs பாம்பு.. ஜெயிக்கப்போவது யார்..? நடுரோட்டில் நடந்த பயங்கர மோதல்… வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு மயில் மற்றும் ஒரு பாம்புக்கு இடையே நடக்கும் கடுமையானப் போராட்டம்…

13 minutes ago