காமராஜர் சாகும்போது கருணாநிதியின் கையைப் பிடித்து நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று கூறியதாக திமுக எம்பி திருச்சி சிவா பேசியுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒருவர் இறக்கும்போது அவரை தூற்றுவதும் அவர் இறந்த பிறகு போற்றுவதும் பல இடங்களில் நடப்பது தான். அதுவே அரசியலைப் பொறுத்தவரையில் மறைந்த ஒருவர் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லி கைதட்டு வாங்குகிறார்கள். அவர் கூறும் தகவல் உண்மையா இல்லையா என்று கூட தெரியாமல் கட்சிக்காரர்களும் அதனை ரசிக்கின்றனர். அப்படிதான் தற்போது திமுக எம்பி திருச்சி சிவா பேசியுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சென்னை பெரம்பலூரில் நடந்த திமுக கூட்டத்தில் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா,கருணாநிதி என் 24 வயதின் போது என்னை காரில் அழைத்து செல்வார். அப்போது என்னிடம் பழைய நிகழ்வுகளை சொல்வார். சிலர் சின்ன பையனிடம் எதற்கு இதெல்லாம் சொல்றீங்க என்று நினைப்பார்கள். ஆனால் அதை நான் மேடையில் சொல்வேன் என கருணாநிதியைக்கு நன்றாக தெரியும். அப்படி ஒரு நாள் மின்சார தட்டுப்பாடு குறித்து தமிழகம் முழுவதும் காமராஜர் கண்டனக் கூட்டம் போடுகிறார்.
காமராஜருக்கு ஏசி இல்லை என்றால் உடம்பில் அலர்ஜி வந்து விடும். அதற்காக அவர் தங்கும் அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி அமைக்க உத்தரவிட்டதாக கருணாநிதி கூறினார். தன்னை எதிர்த்து பேசினாலும் அவருடைய உடல் நிலையை கருதி நான் உத்தரவிட்டேன் என்று கருணாநிதி கூறினார். அதனைப் போலவே ஒரு நாள் காமராஜர், கருணாநிதியின் கையைப் பிடித்துக் கொண்டு உயிர் போவதற்கு முன்பு, நீங்கள்தான் இந்த நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என கூறினார் என்று திருச்சி சிவா மேடையில் பேசியுள்ளார். திருச்சி சிவாவின் இந்த பேச்சுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…
ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…
சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…
பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…
ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…