வைரமுத்து வசனத்தில் பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருந்த படம்… அட இவரின் பயோபிக்கா..?

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு என ஒரு பல்துறை வித்தகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய மூன்று திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாகவேக் கலக்கிய கமல்ஹாசனை வளர்ந்த பிறகு கதாநாயகனாக்கி 28 படங்களுக்கு மேல் இயக்கினார் பாலச்சந்தர். இவர்கள் இணைந்த ஏக் துக் ஜே கேலியே படம் இந்திய அளவில் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது.

   

இந்நிலையில் இவர்கள் இணைந்து உருவாக்க ஆசைப்பட்ட ஒரு படம் தொடங்கப்படாமலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அது என்ன படம் தெரியுமா? மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம்தானாம். இந்த படத்தை வைரமுத்து திரைக்கதை வசனத்தில் பாலச்சந்தர் இயக்க கமல்ஹாசன் நடிப்பது என முடிவாகியுள்ளது. இசை இளையராஜா என்றும் முடிவாகியுள்ளது.

அப்போது வைரமுத்து தன்னுடைய பாடல்களால் தமிழ் திரையிசை உலகில் ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். அதனால் அவர் வசனம் எழுதினால் பாரதி படத்துக்கு பொருத்தமாக இருக்கும் என பாலச்சந்தர் முடிவு செய்துள்ளார். அதற்கான வேலைகளிலும் வைரமுத்து ஈடுபட்டுள்ளார்.

ஆனால் ஏனோ சில காரணங்களால் இந்த படம் தொடங்கப்படவே இல்லையாம். அதன் பின்னர் 30 ஆண்டுகள் கழித்து பாரதியார் வாழ்க்கை வரலாற்றை ஞான ராஜசேகரன் ஷாயாஜி ஷிண்டே நடிப்பில் உருவாக்கினார். அந்த படம் தமிழ் ரசிகர்களைக் கொஞ்சம் கூட கவரவில்லை. ஒரு வேளை கமல்ஹாசன் நடித்திருந்தால் அந்த படம் ஒரு முக்கியமானப் படமாக அமைந்திருக்கலாம்.