Categories: சினிமா

ஒரே செலவில் இரண்டு நிகழ்ச்சி… கமல்ஹாசனின் சாதுர்யம் யாருக்கு வரும்…?

Spread the love

உலகநாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவின் மகா நடிகன். தனது ஐந்து வயது முதலே சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பவர். ஐந்து வயதில் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அந்த காலத்திலேயே புகழ் பெற்றவர் கமலஹாசன்.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி ஆகிய படங்களிலும் தோன்றியிருக்கிறார் கமலஹாசன். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் கமலஹாசன். இவரது வெற்றி படங்கள் கணக்கில் அடங்காதது. தெளிவான தமிழ் பேசக் கூடியவர் கமலஹாசன்.

திரைப்படங்கள் மட்டுமல்லாது விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோ ஆன பிக் பாஸை ஏழு சீசன்களாக தொகுத்து வழங்கி வந்தவர் கமலஹாசன். 2018 ஆம் ஆண்டு முதல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியையும் தொடங்கி அரசியல் பணிகளில் அவ்வபோது ஈடுபட்டு வருகிறார் கமலஹாசன்.

சமீபத்தில் கடந்த சனிக்கிழமை பிரதமர் மோடி அறிவித்த ஒரு நாடு ஒரு தேர்தல் என்ற அறிக்கையை பற்றி சென்னை காமராஜர் அரங்கில் மக்கள் நீதி மய்யம் கூட்டத்தை ஏற்பாடு செய்து தனது தொண்டர்களுடன் கலந்துரையாடினார் கமலஹாசன். அதே நாளில் கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து இருக்கிறார் கமலஹாசன்.

இதில் கமலஹாசன் அவர்களின் சாதூரியம் என்னவென்றால் காமராஜர் அரங்கில் காலையில் இருந்து மதியம் வரை தொண்டர்களுடன் கட்சி மீட்டிங்கை நடத்தி முடித்துவிட்டு மதியத்துக்கு பிறகு தொண்டர்களை வெளியே அனுப்பிவிட்டு உடனே காஸ்ட்யூம் சேஞ்ச் பண்ணி விட்டு அதே மேடையில் அமரன் நிகழ்ச்சியையும் நடத்தி முடித்து விட்டாராம் கமல். ஏனென்றால் அதற்கு பிறகு அவர் வெளிநாடு சூட்டிங் செல்ல வேண்டி இருப்பதால் இந்த மாதிரி செய்துவிட்டாராம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் ஒரே செலவில் இரண்டு நிகழ்ச்சிகளையும் நடத்தி முடித்திருக்கிறார் கமலஹாசன்.

admin

Recent Posts

BREAKING: நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்… 4 நாட்களில் ரூ.4,500 குறைந்த தங்கம்… இன்றைய சவரன் விலை என்ன தெரியுமா?…!!

உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…

8 minutes ago

“உயிருடன் திரும்பி வருவாரா?”… திடீரென பாய்ந்த காட்டாற்று வெள்ளம்… அருவியில் நடந்த கோரம்… தமிழக இளைஞர் நிலை என்ன?…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…

16 minutes ago

திடீர் திருப்பம்!… ரூ.21 கோடி நகை கொள்ளை… சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்… போலீஸ் விசாரணையில் வெளியான பகீர் டுவிஸ்ட்…!!

மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலைப் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட பிரபல நகைக்கடையின் புதிய கிளையில் சுமார் 21…

25 minutes ago

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

3 மணத்தியாலங்கள் ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

3 மணத்தியாலங்கள் ago