Categories: சினிமா

“தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க” காமெடியில் கலக்கிய ஜனகராஜ் – RS சிவாஜி.. அவங்கள ஹீரோவா வச்சு கமல் எடுக்க நினைத்த படம்..

Spread the love

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் காமெடி நடிகராக பிரபலமானவர் நடிகர் ஜனகராஜ். 80 மற்றும் 90களில் வந்த அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கிய காமெடியன் ஜனாகராஜ் தான். 1978ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த  ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்

ஜனகராஜ் நடிகர் மட்டுமில்லாமல் ஒரு கிடாரிஸ்ட்டும் ஆவார். தமிழ் சினிமாவில அதிகளவில் உலக சினிமா படங்கள் பார்த்து அறிவை வளர்த்துக் கொண்ட நடிகர்களில் ஒருவர். ஜனகராஜுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படம் எடுத்தவர்களில் நடிகர் கமல்ஹாசனும் ஒருவர்.

அவரோடு ஜனகராஜ் இணைந்து நடித்த நாயகன், அபூர்வ சகோதரர்கள் மற்றும் குணா போன்ற படங்கள்தான் அவரின் கேரியரில் அவர் நடித்த சிறப்பான படங்கள் என சொல்லலாம்.  அதிலும் குறிப்பாக  அபூர்வ சகோதரர்கள் படத்தில் அவர் நடித்திருந்த கதாபாத்திரம் நகைச்சுவையின் உச்சமாக அமைந்தது. அந்த படத்தில் தப்பு தப்பாக அவர் துப்பறிய அதை சிலாகித்து ஆர் எஸ் சிவாஜி “தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க” என ஐஸ் வைப்பார்.

அப்படி இருவரும் அடித்த காமெடி லூட்டி அந்த படத்தின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாக அமைந்தது. அதன் பின்னர் இருவரும் தெலுங்கு படமொன்றில் சிரஞ்சீவியோடு இணைந்து நடித்தனர். இந்நிலையில் இந்த காமெடி காட்சிக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அவர்கள் காம்பினேஷனில் ஒரு முழுநீள நகைச்சுவை படத்தையே எடுக்கலாம் என ஆசைப்பட்டுள்ளார். ஹாலிவுட்டில் லாரல் ஹார்டி வகை படங்கள் வருவது போல அந்த படம் இருக்கும் என கூறியுள்ளார். அந்த படத்துக்கு கிரேஸி மோகனை வசனம் எழுத வைக்கலாம் எனவும் ஆசைப்பட்டுள்ளார்.

ஆனால் குணா படத்தின் போது ஜனகராஜுக்கும் ஆர் எஸ் சிவாஜிக்கும் இடையே சண்டை ஏற்பட்டு அது அடிதடி வரை சென்றதால் அந்த எண்ணத்தைக் கமல் கைவிட்டுள்ளார்.

vinoth

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

30 minutes ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

34 minutes ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

43 minutes ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

1 மணத்தியாலம் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

1 மணத்தியாலம் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

1 மணத்தியாலம் ago