Categories: CINEMA

வெறும் 6 நாளுக்கு 150 கோடி ரூபாய் சம்பளமா..? PAN இந்தியாவையே அலறவிடும் ஆண்டவர்..

நடிகர் கமல்ஹாசன் இப்போது மிக பிஸியான ஒரு நடிகராக மாறிவிட்டார். இந்தியன் 2, இந்தியன் 3, தக்லைப், பிரபாஸ் நடிக்கும் புராஜெக்ட் கே என சொல்லப்படுகிற கல்கி ஆகிய படங்களில் நடிக்கிறார். இதற்கிடையே வலிமை பட இயக்குநர் எச். வினோத் படத்திலும் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதாவது மார்ச் மாதம் மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் படப்பிடிப்பு துவங்குகிறது. அதே நேரத்தில் எச். வினோத் படப்பிடிப்பையும் துவங்கச் சொல்லி விட்டார். இதில் மணிரத்னம் படத்துக்கு 15 நாள், எச். வினோத் படத்துக்கு 10 நாள் என மாறி மாறி நாட்களை ஒதுக்கி இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் கமல் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

நடிகர் பிரபாஸ் நடிக்கும் பான் இந்தியா படமான புராஜெக்ட் கே, கல்கி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லன் கேரக்டரில் நடிக்கிறார். இவருக்கு இந்த படத்தில் நடிக்க பேசப்பட்ட சம்பளம் ரூ. 150 கோடி ரூபாய். மொத்தம் ஷூட்டிங்கில் அவர் கலந்துக்கொள்ள வேண்டிய நாட்கள் 20 நாட்கள் மட்டுமே. அதாவது ஒருநாள் ஷூட்டிங்கில் கமல் பங்கேற்க பெறுகிற சம்பளம், ரூ. 7.50 கோடி. கடந்த வாரத்தில் கமல் திடீரென 3 நாட்கள் காணாமல் போனார். யாருக்கும் விவரம் தெரியவில்லை. பின்னர் விசாரித்த போது அவர் கல்கி படத்தில் 3 நாட்கள் நடித்துவிட்டு வந்தது தெரிய வந்தது. அதன்படி இன்னும் மீதி 17 நாட்கள் நடிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

இதற்கிடையே மீண்டும் 3 நாட்கள் சென்று, கல்கி படத்தில் நடித்துவிட்டு வந்திருக்கிறார். அதாவது 6 நாட்கள் அவர் நடித்து முடித்த நிலையில், மொத்தமே 6 நாட்கள்தான் ஷூட்டிங், கமல் நடிக்க வேண்டிய போர்ஷன் படத்தில் முடிந்துவிட்டது என்றும் தகவல் வந்தது. அப்படி என்றால், 6 நாட்களுக்கு ரூ.150 கோடி கமலுக்கு சம்பளமா என்று பரவலாக பரபரப்பாக பேச்சு எழுந்தது. ஆனால் உண்மையில், 20 நாட்கள்தான் கமல் ஷூட்டிங்கில் பங்கேற்க வேண்டும். கல்கி படத்தை 2 பாகங்களாக எடுக்கின்றனர். முதல் பாகத்தில் கமல் 6 நாட்கள் நடித்தால் போதும். மீதி 14 நாட்கள், கல்கி 2ம் பாகத்தில் அவரை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர். ரூ. 150 கோடி சம்பளம் கமலுக்கு தருவதால், 2 பாகங்களிலும் கமல் அந்த படத்தில் இடம்பெறும் வகையில் படக்குழு திட்டமிட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

Sumathi
Sumathi

Recent Posts

டி ராஜேந்திரனின் படத்தை டிவியில் பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா..? உஷாரா அப்பவே அவர் செஞ்ச விஷயம்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் டி ராஜேந்தர். சினிமாவில் வெற்றி காண்பது என்பது மிகப்பெரிய விஷயம்.…

21 mins ago

ஐயா படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தானாம்.. அவர் மட்டும் நடிச்சிருந்தா..? பிரபலம் சொன்ன தகவல்..!

ஹரி இயக்கத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் ஐயா. இந்த திரைப்படத்தில்…

1 hour ago

பேரனின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்… பர்த் டே பார்ட்டில இப்படி ஒரு ஸ்பெஷலா…? இதை யாராச்சும் கவனிசீங்களா..?

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர்.…

2 hours ago

அல்லு அர்ஜுன் பார்த்த வேலை.. கடும் கோபத்தில் சிரஞ்சீவி குடும்பத்தினர்.. வெளிச்சத்திற்கு வந்த பிரச்சனை..!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். ஆர்யா என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் பல…

2 hours ago

எனக்கு ஏற்கனவே குழந்தை இருக்கா..? பல வருட ரகசியத்தை உடைத்த நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா..!!

நடிகர் ரெடின் கிங்ஸ்லி முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினிகாந்த், ஆகியோரின் படங்களில் நடித்துள்ளார். அவரது வித்தியாசமான பாடி லாங்குவேஜ்…

2 hours ago

“எனக்கு பொறக்க போறது இந்த குழந்தை தான்”… பார்ட்டி வைச்சு வீடியோ வெளியிட்ட ‘குக் வித் கோமாளி’ இர்பான்…  ஷாக்கில் ரசிகர்கள்…

விஜய் டிவியில் தற்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக…

3 hours ago