இந்தியன் 2 திரைப்படம் கடந்த நான்கு நாட்களில் மொத்தமாக எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பது தொடர்பான தகவல் வெளியாகியிருக்கின்றது.
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் இந்தியன் 2. பொதுவாக சங்கர் திரைப்படம் என்றாலே அதில் பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. அதே அளவிற்கு திரைப்படமும் மக்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். ஆனால் இந்தியன் 2 திரைப்படம் வெளியான நாள் முதலே தொடர்ந்து மோசமான விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது.
மூன்று வருட காத்திருப்புக்குப் பிறகு வெளியான இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12-ம் தேதி இந்தியா முழுவதும் பல திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் கமலஹாசன் ஹீரோவாக நடிக்க சித்தார்த், எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி, யோகி பாபு, ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.

அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தியன் திரைப்படம் எந்த அளவுக்கு வரவேற்பை பெற்றதோ அதில் பாதி அளவுக்கு தான் இந்தியன் 2 திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கின்றது. தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதால் வசூலிலும் மிகப்பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது.
நடிகர் கமலஹாசன் கடைசியாக நடித்த விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் இந்த திரைப்படம் அவருக்கு பிளாப் ஆகத்தான் அமைந்துள்ளது. கடந்த 12ஆம் தேதி வெளியான இந்த திரைப்படத்தின் நான்கு நாள் மொத்த வசூல் 124 கோடி தான். படத்தின் பட்ஜெட் 500 கோடியாக இருந்த நிலையில் நான்கு நாட்களில் வரும் 124 கோடி தான் வசூல் செய்துள்ளது.

இது தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதற்கிடையில் அடுத்ததாக இந்தியன் 3 என்ற திரைப்படத்தையும் எடுத்து வைத்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் எந்த அளவுக்கு இருக்கப் போகிறது என்று பலரும் தங்களது விமர்சனங்களை கூறி வருகிறார்கள். வரும் நாட்களில் படத்தின் வசூலில் ஏதாவது மாற்றம் ஏற்படுகின்றதா என்பதை பார்ப்போம்.
