தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகின்றது.
இப்படியான நிலையில் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் துவக்கி விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜூலை 15ஆம் தேதி முதல் உங்கள் ஸ்டாலின் முகங்கள், பத்தாயிரம் இடங்களில் நடைபெறும் என்றும் அந்த முகாம்களில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். அதன் மீது 45 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம் பல்லாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், 17 வயது முதலாம் ஆண்டு மாணவியை ஏமாற்றி பாலியல்…
பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…
தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…