தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷிற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக இளம் பெண்களின் மனதில் அதிகமாக இடம் பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முதலில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படம் மக்களிடையே பெருமளவில் வரவேற்பை பெறவில்லை. அதனைத் தொடர்ந்து காதல் கொண்டேன் என்ற படத்தில் மூலமாக தனது திறமையை முழுமையாக வெளிக்காட்டி நடித்திருப்பார் நடிகர் தனுஷ்.

இந்தப் படத்தின் வெற்றி தனுஷிற்கு தனி இடத்தை பெற்று தந்தது. அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றியை பெற்றுள்ளது. மேலும் இவர் பா பாண்டி என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். தனுஷ் தற்போது 49 வது படமாக ராயன் படத்தை இயக்கியும் நடித்துள்ளார். இந்தப் படம் சற்று சுமாராக இருந்தாலும் வசூல் எண்ணிக்கையில் சக்க போடு போட்டுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தெரிவித்திருக்கிறது.

தனுஷ் மேலும் இரண்டு படங்களுக்கு கால் சீட் கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிலையை தற்போது இயக்குனர் பிரவீன் என்பவர் தனுஷை பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் அப்பாக்களை அவமதிப்பதாக நடித்துள்ளார்.

மேலும் அந்த படத்தில் தனுஷ் அப்பா முன் தண்ணி அடிப்பது சிகரெட் பிடிப்பது பெண்களுடன் பழகுவது போன்ற காட்சிகளை நடித்து தமிழ் கலாச்சாரத்தை கெடுத்துள்ளதாகவும் கூறியிருக்கிறார். இதன்மூலம் தனுஷின் குடும்பம் தான் கலாச்சார சீரழிவிற்கு வழி வகுக்கிறது என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த இயக்குனரின் விமர்சனம் தனுஷ் ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் அவர்கள் கோபத்தையும் தூண்டி உள்ளது. தனுஷின் ரசிகர்கள் இயக்குனர் பிரவினை கடுமையாக சித்தியும் இவரது படத்தில் தவறான காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லையா என்றும் கேள்வியை எழுப்பி உள்ளனர்.
