நான் எதையும் தியாகம் செய்யல.. லேட்டா தான் கல்யாணம் பண்ணன்.. பல வருடங்களுக்கு பிறகு மனம் திறந்த காதல் மன்னன் திலோத்தமா..

By Deepika

Updated on:

அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் படத்தை அத்தனை எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. அதிலும் திலோத்தம்மாவை கண்டிப்பாக மறக்க முடியாது. அப்படிப்பட்ட நடிகை அந்த ஒரு படத்திற்கு பின் ஆளே காணாமல் போய்விட்டார். இந்தநிலையில் காதல்மன்னன் வெளியான 26 வருடங்களுக்கு பின்னர், மானு சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.

Ajith and Manu in Kadhal mannan

அதில், என் தாத்தா அசாம் மாநிலத்தின் முதலமைச்சர் Gopinath Bordoloi. நான் படிக்க தான் சென்னைக்கு வந்தேன், பள்ளி படிக்கும் காலத்திலேயே காதல் மன்னன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அப்போது விவேக் மற்றும் இயக்குனர் சரண் இருவரும் என்னை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார்கள். ஆனால்,படிப்பு முக்கியம் என எனக்கு தோன்றியதால் அதன் பின் நான் நடிக்கவில்லை என்றார்.

   
Actress Manu dance perfomance

தொடர்ந்து பேசிய மானு, திருமணத்திற்கு பிறகு எனக்கு ஒரு புது வாழ்க்கை கிடைத்தது. அவரை நான் என் கணவராக நான் பார்த்ததே இல்லை, அவரை ஒரு நல்ல நண்பராக பார்க்கிறேன். அவர் என் பெஸ்ட்டி. நிறைய பேர் சீக்கிரம் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் சென்று விட்டேன் என கூறுகிறார்கள். அப்படியெல்லாம் இல்லை, நான் காதல் மன்னன் நடிக்கும்போது 16 வயது தான், அதன்பின் படித்தேன். பரதநாட்டிய கலைஞர் நான், உலகம் முழுவதும் சென்று ஆடி, மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுத்து என் வாழ்வை என்ஜாய் செய்தேன். லேட்டாக தான் திருமணம் செய்து கொண்டேன்.

Thilotama manu about her family

நான் தியாகம் எதுவும் செய்யவில்லை, என் வாழ்க்கையில் நான் நினைத்த அனைத்தும் செய்துள்ளேன். முழுமையாக என் வாழ்க்கையை என்ஜாய் செய்துள்ளேன். கல்யாணத்திற்கு பிறகும் நான் என் வேளையில் பிசியாக தான் உள்ளேன். சினிமாவில் நடிக்காமல் கல்யாணம் செய்து செட்டிலானதனால் தியாகம் செய்தேன் என்றெல்லாம் இல்லை என கூறியுள்ளார் மானு.

 

author avatar
Deepika