#image_title
சூதுகவ்வும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முத்திரைப் பதித்தவர் இயக்குனர் நலன் குமாரசாமி. ப்ளாக் காமெடி என்ற ஜானரில் அதற்கு முன்பு தமிழ் சினிமாவில் மும்பை எக்ஸ்பிரஸ் என்ற தோல்விப்படம் மட்டுமே ரிலீஸ் ஆகியிருந்தது. ஆனால் சூதுகவ்வும் திரைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
இதனால் தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே கவனிக்கப்படும் இயக்குனரானார் நலன். ஆனால் அடுத்து அவர் இயக்கிய காதலும் கடந்து போகும் ஒரு கொரியன் படத்தின் ரீமேக். மை டியர் டெஸ்பரடாரோ என்ற தென் கொரிய திரைப்படத்தை அனுமதி வாங்கி ரீமேக் செய்தார் நலன்.
விஜய் சேதுபதி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகிய இருவரும் கதிர் மற்றும் யாஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சமூகத்தின் வெவேறு பின்புலங்களில் இருந்து வரும் இருவரும் அண்டை வீடுகளில் வசிக்க நேரிடுகிறது. இருவருக்கும் இடையே மோதலோடு தொடங்கும் உறவு மெல்ல நட்பாக மாறுகிறது.
ஒரு கட்டத்தில் அதைக் காதல் என்று கதிர் நினைத்துக் கொண்டு அவளிடம் பழகுகிறான். இருவரும் மற்றவரின் வாழ்க்கைப் பாதையில் திருப்புமுனையை ஏற்படுத்துகின்றனர். யாழினி ஆசைப்படும் வேலை கிடைக்க அவளுக்கு உதவி செய்கிறான் கதிர். அதன் பின்னர் இருவரும் சந்திக்க முடியாமல் வாழ்க்கை இருவரையும் அவர்களின் பாதையில் அடித்து செல்கிறது. தான் ஆசைப்பட்ட துறையில் வளர்ந்து நிற்கும் யாழினி ஒரே ஒரு முறை கதிரை பார்க்கவேண்டும் என ஆசைப்படுகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பெட்ரோல் பங்க் ஒன்றில் சந்தித்துக்கொள்ளும் போது இருவர் முகத்திலும் நிகழும் சிறு புன்னகையோடு ஒரு கவிதையின் இறுதிவரி போல முடியும் படம்.
இந்த படம் மார்ச் மாதம் 2016 ஆம் ஆண்டு வெளியானது. வெளியான போது இந்த படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் காலம் செல்ல செல்ல இந்த படத்துக்கான ரசிகர்கள் கூட்டம் உருவானது. இந்நிலையில் இப்போது 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் காட்சித் துணுக்குகளைப் பகிர்ந்து இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…
2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…
தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை…