Categories: CINEMA

“ரொம்ப அவமானமா இருக்கு”.. அவங்க மேல மான நஷ்ட ஈடு வழக்கு தொடர போறேன்.. பகீர் கிளப்பிய மம்முட்டி, ஜோதிகா பட இயக்குனர்..!!

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் மம்மூட்டி நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் தான் காதல் தி கோர். இந்த திரைப்படத்தில் ஜோதிகா மம்முட்டியுடன் சேர்ந்து நடித்திருந்தார். குடும்ப கதை அம்சத்துடன் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலும் குறிப்பாக இந்த படத்தில் மம்முட்டியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடில் உள்ள ஒரு தனியார் கல்வி நிர்வாகம், இன்றைய நாட்களில் மலையாள சினிமாவில் உள்ள மறைமுக அரசியல் என்ற தலைப்பில் ஒரு விவாதத்தை நடத்திய நிலையில் சிறப்பு விருந்தினராக இந்த திரைப்படத்தின் இயக்குனர் ஜியோ பேபியை அழைத்துள்ளனர்.

ஆனால் அவர் அங்கு வந்த பிறகு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது ஜியோ பேபி பொது இடத்தில் பேசக்கூடிய கருத்துக்கள் சமூக அளவில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை என்று மாணவர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என மாணவர்கள் அமைப்பு மூலமாக அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள இயக்குனர் ஜியோ பேபி, என்னுடைய கருத்துக்கள் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது எனக் கூறுவதை நான் மிகப்பெரிய அவமானமாக நினைக்கிறேன்.

இது குறித்த விவரங்களை அறிய கல்லூரி முதல்வரை தொடர்பு கொண்டால் இப்போது வரை அவர் என்னுடைய போனை எடுக்கவில்லை. நாளை இதுபோன்ற ஒரு நிகழ்வு வேறு ஒரு இயக்குனருக்கு நடந்துவிடக் கூடாது என்பதால் கல்லூரி நிர்வாகம் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளேன் என்று அவர் கூறியுள்ளார். அதேசமயம் இந்த திரைப்படத்தில் இயக்குனர் ஜியோ பேபி ஓரின சேர்க்கையாளர்களின் வாழ்க்கை குறித்து கூறியிருப்பது தான் இந்த சர்ச்சைக்கு காரணம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Nanthini
Nanthini

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

7 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

8 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago