Categories: சினிமா

நான் ஒரு நல்ல நடிகர்.. ‘எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க சார்’.. ஓப்பனாகவே வாய்ப்பு கேட்ட காதல் கொண்டேன் பட நடிகர்..!

Spread the love

நீண்ட இடைவெளிக்குப்பின் காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்த சுதீப் சரங்கி அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது. தனுஷ் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதல் கொண்டேன். இப்படத்தில் சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்திருப்பார். இவருக்கு காதலனாக நடித்தவர் தான் சுதீப் சுரங்கி.

கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த இவர் தனது படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறையில் ஈடுபட்டு பல ராம் பாக் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருக்கின்றார். பிரபல மாடலாக வளம் வந்த இவர் பின்னர் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக கூத்து பட்டறையில் சேர்ந்து பல நாடகங்கள் மற்றும் ஹிந்தி பெங்காலி திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார்.

தமிழில் முதன்முதலாக செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படம் நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு வெளியான என்னமோ புடிச்சிருக்கு என்ற படத்திலும் நடித்திருந்தார். பின்னர் பெங்காலி, ஹிந்தி துறையில் கவனம் செலுத்தி வந்த இவர் 2005 ஆம் ஆண்டு திரைப்படத்தில் நடித்தார். பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் டிவி சீரியல்களில் நடித்து வந்த இவர் ஹிந்தியில் பாபா ஐசோ வர் தூண்டு, சிஐடி போன்ற சீரியலில் நடித்திருக்கின்றார்.

பின்னர் மீண்டும் ஹிந்தியில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் சஹாரா ஒன் 100 நைட் என்று திரைப்படத்தில் பெண் வேடம் அணிந்து நடித்திருப்பார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தங்களது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். சமீபத்தில் கூட அவர் டாக்ஸி டிரைவர் உடை அணிந்து இருப்பதை பார்த்து பலரும் டாக்சி ஓட்டுகிறாரா என்று தொடர்ந்து கூறி வந்த நிலையில் அது ஒரு படத்திற்கான கெட்டப் என்று பேட்டியில் தெரிவித்திருந்தார் .

பின்னர் பேசிய அவர் கூறியிருந்ததாவது “என்னை வாழ வைத்த தமிழ் சினிமாவால் நான் நன்றாக இருக்கிறேன். காதல் கொண்டேன் படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும் என்னை மறக்காமல் இருக்கிறார்கள். என்னுடைய முதல் படமே காதல் கொண்டேன். அது நல்ல ஹிட்டாக அமைந்தது. அந்த படத்தில் தனுஷ் சார் என்னுடன் வந்து கிரிக்கெட் விளையாடியது எல்லாம் மறக்கவே முடியாது. இப்படத்தின் வெற்றிக்கு நடிகர் தனுஷின் நடிப்பும், யுவன் சங்கர் ராஜா பாடலும் மிக முக்கியமாக இருந்தது.

2002 ஆம் ஆண்டில் இருந்து 2005 ஆம் ஆண்டு வரை சென்னையில் இருந்தேன். காதல் கொண்டேன் படத்திற்கு பிறகு இரண்டு படங்களில் நடித்திருந்தேன். அது சரியாக ஓடவில்லை. பின்னர் வந்த வாய்ப்புகளும் பெரிய அளவில் இல்லாத காரணத்தினால் மும்பைக்கு சென்று விட்டேன். இப்போது ஒரே ஒரு தமிழ் படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். சான்ஸ் குடுங்க சார் உங்க நம்பிக்கையே கண்டிப்பா காப்பாற்றுவேன்” என்று அவர் பேசி இருந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Mahalakshmi

Recent Posts

“2 பிள்ளைகளின் தந்தை…” வேலைக்கு வந்த இளம்பெண்ணை விடாமல்…! போட்டோவை பார்த்து ஷாக்கான காதலன்… பகீர் பின்னணி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில்…

6 minutes ago

“பிள்ளைகளை வளர்ப்பது அம்மா.. நல்ல அப்பானு பெருமை பேசுவதா…? ரவி மோகனை மறைமுகமாக அட்டாக் செய்த ஆர்த்தி…!

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன.…

25 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… என் மானத்தை காப்பாத்த இதான் வழி… சாதி வெறியால் தூங்கிக் கொண்டிருந்த… 17 வயது மகளைக் கொடூரமாகக் கொன்ற தந்தை… ஆக்ராவில் பகீர் சம்பவம்…!

ஆக்ராவில் ஜாதிய மறுப்பைத் தாண்டி உறவுமுறையில் ஈடுபட்டதாகக் கூறி, 17 வயது சிறுமி அவரது தந்தையாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்…

25 minutes ago

ஐயோ பாவம்… கல்லூரிப் பேருந்து மோதி… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த… 3 மாணவிகள் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள சக்கரம்பாளையம் சந்திப்பில் நிகழ்ந்த கோர சாலை விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை…

35 minutes ago

“கை, காலில் தொற்று…?” தளராமல் கைகளால் ஆற்றை சுத்தம் செய்யும் வாலிபர்… நகராட்சியை நோக்கிக் கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்…!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிட்டு தபாஹி என்ற 20 வயது கல்லூரி மாணவர், தனது பகுதியில் உள்ள மாசடைந்த ஆஜனார்…

46 minutes ago