#image_title
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் தொடர்ந்து ஹிட்டு திரைப்படங்களை கொடுத்து பிரபலமாக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார். ரஜினி, கமல், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் மற்றும் சூர்யா என பல முன்னணி நடிகர்களை வைத்து கமர்ஷியல் படங்களைக் கொடுத்துள்ளார். கடைசியாக அவர் இயக்கிய லிங்கா உள்ளிட்ட படங்கள் தோல்வி அடைந்ததால் இப்போது நடிகராக மட்டும் பணியாற்றி வருகிறார்.
புரியாத புதிர் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவிகுமார் தொடர்ந்து கமர்ஷியல் ரீதியான படங்களாகக் கொடுத்து முன்னணி இயக்குனர் ஆனார். கமர்சியல் படங்களின் ராஜாவாக திகழ்ந்த இவர் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நாட்டாமை. இதில் குஷ்பு, மீனா, வினு சக்ரவர்த்தி, கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
அவர் இயக்கியதில் பெருவெற்றிப் பெற்ற படங்களில் ஒன்று ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படம். இந்த படத்தில் இடம்பெற்ற நீலாம்பரி கதாபாத்திரம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பிரதிபலிப்பது போல உருவாக்கப்பட அதனால் பல சர்ச்சைகள் எழுந்து அதுவே படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றின.
இந்நிலையில் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை படமாக்கும்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை கே எஸ் ரவிகுமார் பகிர்ந்துள்ளார். அதில் “படத்தில் நீலாம்பரி இறந்தபின்னர் அவள் கண்களை மூடிவிட்டு கையில் வேலோடு ரஜினி சார் நடந்து வரும் காட்சியைப் படமாக்கினேன். அப்போது பின்னணியில் வெற்றிக்கொடிகட்டு பாடல் ஒலிக்கும்.
அந்த பாடல் வேண்டாம் சிங்கநடைப் பாட்டைப் போடச்சொல்லு என ரஜினி சார் ரமேஷ் கண்ணாவிடம் சொல்லிவிட்டார். அவன் வந்து என்னிடம் சொல்ல நான் கோபமாகி “டேய் முட்டாள்… என்னதான் அவள் வில்லியாக இருந்தாலும் அவள் இறந்ததால் அவள் மேல் சிம்பதி உருவாகிவிடும். இப்ப பில்டப் பாட்ட போட்டா அது காமெடி ஆகிடும். இப்ப தடைகளை உடைத்து முன்னேறு என்ற பாட்டை போட்டாதான் அது கரெக்ட்டா இருக்கும் எனக் கூறினேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளாக உகாண்டா நாட்டை உலுக்கி வந்த கொடூர சீரியல் கில்லரும், மனித மாமிசம் தின்னும் பழக்கம் கொண்டவனுமான…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மற்றும் டீப்ஃபேக் முறையின் துஷ்பிரயோகம் சினிமா பிரபலங்களை தொடர்ந்து குறிவைத்து வரும் நிலையில், தற்போது…
அதிமுகவில் இருந்து பல முக்கிய தலைவர்கள் தவெகவை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், டெல்டா மாவட்டத்தின் முக்கிய முகமாகவும், முன்னாள்…
ஹைதராபாத்தில் மென்பொருள் நிறுவன ஊழியர் ஒருவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர…
மதுபானக் கடை ஒன்றில் மது வாங்கச் சென்ற ராஜேஷ் என்பவருக்கும், அங்கிருந்த விற்பனையாளருக்கும் இடையே திடீரென கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டது.…
கிருஷ்ணகிரி மாவட்டம் கண்ணண்ட அள்ளி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மாமனார் மீது மருமகன் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளார். குடும்பப்…