இது தமிழ்நாடா அல்லது உத்தரப்பிரதேசமா..? எங்களுக்கு காசு, பணம், தங்கம் எதுவும் வேண்டாம்… ஆனால்… CM விஜய்யை வம்பிக்கு இழுத்த ஜூலி..!!

Spread the love

கொள்கைக்காகவும் மக்களுக்காகவும் மழை, வெயில் என எதையும் பாராமல் திரண்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஜூலி குற்றம் சாட்டினார். ஒரே நாளில் 12 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த ஆட்சியில் 3 வயதுக் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லை எனத் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும், கடந்த ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தபோது ட்விட்டரில் குரல் கொடுத்த தற்போதைய கூட்டணிக் கட்சியினர் இப்போது எங்கே போனார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ஜூலி, தவெக தலைவர் விஜய்யை நோக்கி நேரடி கோரிக்கை ஒன்றை விடுத்தார். சமூக வலைத்தளங்களில் தங்களை விமர்சிப்பவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஆபாச வார்த்தைகளை முதலமைச்சர் விஜய் ஒரே ஒரு வார்த்தை பேசி தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். “விஜய் அண்ணா, பெண்களுக்கு எதிராக இப்படி ஆபாச சொற்களைப் பேச வேண்டாம் என்று உங்கள் ஆதரவாளர்களிடம் ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்கள்; எங்களுக்கு காசு, பணம், தங்கம் எதுவும் வேண்டாம், தமிழ்நாட்டில் பெண்கள் நிம்மதியாக நடமாட உயிர் பாதுகாப்பு மட்டுமே வேண்டும்” என்று அவர் ஆத்திரத்துடனும் கண்ணீருடனும் பேசினார்.

மேலும், தவெக அரசு தனது 40 நாள் ஆட்சியில் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறுவதை ஜூலி கடுமையாக மறுத்தார். திருச்சியில் உள்ள மருத்துவமனை டெண்டர் ஒன்று வெறும் 6 மணி நேரத்திற்குள் முடிக்கப்பட்டதில் எப்படி ஊழல் இல்லாமல் இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர், 48 மணி நேரத்திற்குள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அப்ரூவல் வழங்கப்படுவதை “குஜராத் மாடல்” ஆட்சி என ட்விட்டரில் பெருமையாகப் பகிர்வதைச் சுட்டிக்காட்டினார். இறுதியாக, இது தமிழ்நாடா அல்லது உத்தரப்பிரதேசமா என்று காரசாரமாகக் கேட்டுத் தன் உரையை முடித்தார்.

Soundarya

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

7 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

7 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

7 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

7 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

7 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

7 மணத்தியாலங்கள் ago