1 பைசாவுக்கு தங்க மோதிரமா?!… அரசு மருத்துவமனை குழந்தைகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்… மெர்சல் காட்டிய ஜோய் ஆலுக்காஸ்…!!

Spread the love

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடையில் தங்க மோதிரம் பரிசளிக்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் சுமார் 4.41 லட்சத்துக்கும் மேற்பட்ட பிறந்த குழந்தைகளுக்கு 22 கேரட் தூய்மையான தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன. அரசு மருத்துவமனைகளை நாடி வரும் தாய்மார்களை ஊக்குவிக்கும் வகையிலும், பிறந்த குழந்தைகளுக்கு மங்களகரமான தொடக்கத்தை அளிக்கும் நோக்கிலும் இந்த முன்னெடுப்பு செயல்படுத்தப்படுகிறது.

இந்த மாபெரும் திட்டத்திற்கான தங்க மோதிரங்களை விநியோகிக்கும் பொறுப்பை முன்னணி நகை நிறுவனமான ஜோய் ஆலுக்காஸ் ஏற்றுள்ளது. தங்கத்தின் விலையைத் தவிர்த்து, மோதிரத்திற்கான செய்கூலி, பி.ஐ.எஸ் முத்திரை, பேக்கிங் மற்றும் போக்குவரத்து ஆகிய அனைத்திற்கும் சேர்த்து வெறும் ஒரு பைசாவை மட்டுமே கட்டணமாக நிர்ணயித்து இந்நிறுவனம் ஒப்பந்தத்தை வென்றுள்ளது. இதன் மூலம் மொத்தத் தேவையான மோதிரங்களில் 70 சதவீதத்தை அவர்கள் தயாரிக்கின்றனர். முதற்கட்டமாக, தரம் மற்றும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்ட சுமார் 90,000 மோதிரங்கள் அதிக பிரசவங்கள் நடக்கும் 107 அரசு மையங்களுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எந்தவித லாப நோக்கமுமின்றி ஒரு பைசா கூடுதல் செலவில் இந்த மோதிரங்களை வழங்குவது குறித்து ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தலைவர் ஜோய் ஆலுக்காஸ் மற்றும் ரீடெய்ல் பிரிவுத் தலைவர் ராஜேஷ் கிருஷ்ணன் ஆகியோர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 2004 ஆம் ஆண்டு முதல் தமிழக மக்கள் தங்களுக்கு அளித்து வரும் பேராதரவுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே இந்த வாய்ப்பைக் கருதுவதாக அவர்கள் குறிப்பிட்டனர். பிறந்த குழந்தைகளுக்கு முதல் பரிசாகத் தங்கத்தை வழங்குவது நமது மரபு என்றும், தங்களது நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் இந்த மோதிரங்கள் அக்குழந்தைகளின் வாழ்வில் பெரும் அதிர்ஷ்டத்தையும் வளர்ச்சியையும் கொண்டு வரும் எனத் தாங்கள் உறுதியாக நம்புவதாகவும் அவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

Gayathri

Recent Posts

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

7 minutes ago

அடபாவேமே..! “நிறுத்தவே இல்லை”… கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த கார்… சந்தையில் அலறியடித்து ஓடிய மக்கள்… பதறவைக்கும் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…

8 minutes ago

மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞர்… 3 பேருக்கு மறுவாழ்வு தந்த உறுப்பு தானம்… மனைவியின் நெகிழ்ச்சி செயல்…!!

குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…

17 minutes ago

ஆற்றில் கவிழ்ந்த இனோவா கார்… 4 பேர் துடிதுடித்து பலி… 17 வயது சிறுவன் படுகாயம்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…

33 minutes ago

ஒரு பசுவுக்காக இப்படியா?… கடனை அடைக்க பசுவை விற்ற கணவன்… விபரீதத்தில் முடிந்த விவாதம்… நடந்தது என்ன?… நடுங்க வைக்கும் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…

44 minutes ago

1.5 வயது குழந்தையை தாக்கி 25-வது மாடியிலிருந்து வீசிய 10 வயது சிறுமி…! லிப்டில் நடந்த கொடூரம்…. இணையத்தில் தீயாய் பரவும் ஷாக்கிங் வீடியோ…!!

சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…

47 minutes ago