நடிகரும் சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாகி ஏமாற்றி விட்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸ்டில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அந்த புகாரில், சென்னையில் கோவிலில் வைத்து தன்னை ரங்கராஜ் திருமணம் செய்து கொண்டு தற்போது சேர்ந்து வாழ மறுக்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாகி விட்டு தன்னுடன் சேர்ந்து வாழாமல் ஏமாற்றி விட்டதாகவும் கூறியுள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே சுருதி என்பவரை திருமணம் செய்து கொண்டு தனது இரண்டு மகன்களுடன் சேர்ந்து வாழ்ந்து வரும் நிலையில் அவர் வேறொரு பெண்ணுடன் உறவில் இருப்பதாக தகவல்கள் கசிந்தது. யாரும் எதிர்பாராத விதமாக ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டதாக இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை ஜாய் அண்மையில் வெளியிட்டிருந்தார். தொடர்ந்து அடுத்த சில நாட்களில் தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்து குழந்தைக்கு ராஹா ரங்கராஜ் என பெயர் சூட்டியிருப்பதாகவும் புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்தார்.
ரங்கராஜுடன் பல்வேறு நேரங்களில் நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும் அவர் பதிவிட்டார். இது தொடர்பாக எதுவும் பேசாமல் இருந்த ரங்கராஜ் தனது முதல் மனைவியுடன் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியானது. இப்படியான நிலையில் தான் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக காவல்துறையில் ஜாய் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். ஸ்ருதி உடனான திருமண உறவை தாண்டி ஜாய் என்பவரை ரங்கராஜ் காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இது ரகசியமாக இருந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏதோ மன கசப்பு ஏற்பட அதன் விளைவாகவே ஜாய் திருமண புகைப்படங்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது மிகப்பெரிய சிக்கலாக அமைய இறுதியாக ஜாய் வேறு வழியில்லாமல் காவல்துறையை அடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பாக இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாட்டை அறிந்த பின்னரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இறுதி முடிவு…
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த நூதனத் திருமண மோசடி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யோகேஷ் ஷிண்டே என்ற இளைஞர்…
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அதன் கூட்டணிக்…
தமிழக அரசியல் களம் தற்போது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையில் நிற்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி…
மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் பகுதியில், 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கெங்கவரம் கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் - சத்யா தம்பதியினரின் 11 வயது மகள்…