“குழந்தை வேண்டாம் நீ மட்டும் போதும்”… அடித்து உதைத்த மாதம்பட்டி ரங்கராஜ்… ஜாய் கிரிஸில்டா பரபரப்பு பேட்டி…!

Spread the love

நடிகரும் சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாகி ஏமாற்றி விட்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸ்டில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அந்த புகாரில், சென்னையில் கோவிலில் வைத்து தன்னை ரங்கராஜ் திருமணம் செய்து கொண்டு தற்போது சேர்ந்து வாழ மறுக்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாகி விட்டு தன்னுடன் சேர்ந்து வாழாமல் ஏமாற்றி விட்டதாகவும் கூறியுள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே சுருதி என்பவரை திருமணம் செய்து கொண்டு தனது இரண்டு மகன்களுடன் சேர்ந்து வாழ்ந்து வரும் நிலையில் அவர் வேறொரு பெண்ணுடன் உறவில் இருப்பதாக தகவல்கள் கசிந்தது.

யாரும் எதிர்பாராத விதமாக ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டதாக இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை ஜாய் அண்மையில் வெளியிட்டிருந்தார். தொடர்ந்து அடுத்த சில நாட்களில் தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்து குழந்தைக்கு ராஹா ரங்கராஜ் என பெயர் சூட்டியிருப்பதாகவும் புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்தார். ரங்கராஜுடன் பல்வேறு நேரங்களில் நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும் அவர் பதிவிட்டார். இது தொடர்பாக எதுவும் பேசாமல் இருந்த ரங்கராஜ் தனது முதல் மனைவியுடன் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியானது. இப்படியான நிலையில் தான் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக காவல்துறையில் ஜாய் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜாய், என்னுடைய கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் என்னுடன் தொடர்பில் இல்லை. எனக்கும் என்னுடைய குழந்தைக்காகவும் நான் இப்போது போராடிக் கொண்டிருக்கின்றேன். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றிவிட்டார். என் வயதில் இருக்கும் குழந்தைக்கு அவர்தான் அப்பா. அதனால் பதில் சொல்லி ஆக வேண்டும். முறைப்படி என்னை திருமணம் செய்து கொண்டு வருடங்கள் ஆகிவிட்டது. அப்பார்ட்மெண்டில் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இருவரும் ஜூடிசியல் செப்பரேஷனில் இருப்பதாக கூறியதால் அதை நம்பி தான் தவறை திருமணம் செய்தேன்.

ஒன்றரை மாதமாக அவருடன் எந்த தொடர்பிலும் நான் கிடையாது. கோவிலில் எங்களுடைய திருமணத்தை பதிவு செய்துள்ளோம். என்னை ஏமாற்றி விட்டதாக இப்போது போலீசில் புகார் அளித்துள்ளேன். ரங்கராஜை தொடர்பு கொள்ள பல வழிகளில் முயற்சி செய்தோம் என்னால் பேச முடியவில்லை. மாதம்பட்டி ரங்கராஜ் தொழிலில் இருப்பதால் அவருடைய அப்பா அம்மா எங்களது திருமணம் குறித்து வெளியில் தெரிய வேண்டாம் என கூறினார்கள். இதனால் நாங்கள் அமைதியாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தோம். இப்போது சில உண்மைகள் தெரிய வந்துள்ளதால் என்னுடைய குழந்தைக்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். குழந்தை வேண்டாம் நீ மட்டும் போதும் என்று அவர் கூறினார்.

ஏற்கனவே என்னை ஸ்டார் ஹோட்டல் ஒன்றிலும் தனியார் தொலைக்காட்சி சூட்டிங் ஸ்பாட்டிலும் வைத்து தாக்கினார். இறுதியாக ஒரு வாரத்திற்கு முன்பு அவரை பார்த்தபோது கூட என்னிடம் அவர் பேசவில்லை. கடைசியாக அந்த பேச்சுவார்த்தை தாக்குதலில் தான் முடிந்தது. நான் இறுதியாக பேச முயற்சித்த போது அவர் அனைவரும் முன்பும் சேர்ந்து என்னை தாக்கி விட்டார். அவர் என்னுடன் பேச தயாராக இல்லை என்றும் அவருடன் இருப்பவர்கள் என்னிடம் பேசக்கூடாது என்றும் கூறியதாகவும் கூறினார். மாதம்பட்டி ரங்கராஜ் என்னுடைய கணவர், என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அவர்தான் அப்பா. இது மட்டும் தான் என்னுடைய கோரிக்கை என்று ஜாய் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

Nanthini

Recent Posts

ஷாக்கிங்..! “100 பேரை வச்சு உன்னை அடிப்பேன்” என்னை என்ன சாதாரண ஆள்னு நினைச்சியா..? சிகிச்சை பெற வந்த வாலிபருக்கு செவிலியர் விடுத்த பகீர் மிரட்டல்..!

மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் ஒருவரை, செவிலியர் அதிகாரி பகிரங்கமாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

1 minute ago

பெற்றோர் பேச்சை கேட்கலைனா இதுதான் கதி..! திருமணமான 6 மாதத்தில் எல்லாமே போச்சு.. “வாழ்க்கையை நானே அழித்துக் கொண்டேன்” புலம்பி அழும் பெண்..!!

பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணின் நிதர்சனமான வாழ்க்கைப் போராட்டத்தை இந்தப் பதிவு…

16 minutes ago

“வேலை போனா போகுது நிம்மதிதான் முக்கியம்” வேலையை உதறிவிட்டு இளம்பெண் செய்த செயல்.. வைரலாகும் சம்பவம்..!!

குருக்ராமில் உள்ள ஒரு பெருநிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அன்ஷிகா சிங் என்ற பெண், அங்குள்ள பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும்…

20 minutes ago

விஜய்-சங்கீதா சமரசம்… பிரச்னை ஓய்ந்தது… முதன்முறையாக மனம் திறந்த தந்தை எஸ்.ஏ சந்திரசேகர்..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்துப் பரவி வரும் விவாகரத்து வதந்திகளுக்கு விஜய்யின் தந்தை எஸ். ஏ.…

23 minutes ago

“பாசிசத்திற்கு அடிபணிய மாட்டேன்!” தமிழக மக்களுக்கு எழுதிய பரபரப்பு கடிதம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் 'விசில்' சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அக்கட்சியின் தலைவர் விஜய் மக்களுக்கு உருக்கமான கடிதம்…

27 minutes ago

BREAKING: ரூ.2.44 கோடி சிக்கியது..? இந்த தொகுதியில் தேர்தல் நிறுத்தம்..? பெரும் பரபரப்பு.!!

பெரம்பலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செங்குணம் கிராமப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில்…

55 minutes ago