தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-2027ஆம் ஆண்டுக்கான கலந்தாய்வு அவகாசம் நிறைவடைந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் கல்விச் சான்றிதழ்களுடன் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்களுக்கு விருப்பமான பிரிவைத் தேர்ந்தெடுத்துச் சேர்ந்து கொள்ளலாம். திறன்மிகு தொழிலாளர்களின் தேவை அதிகரித்து வருவதால், இப் பயிற்சியை முடிக்கும் 95% பேருக்கு முன்னணி தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
இப் படிப்பை முடிப்பவர்களுக்கு அவர்களின் திறனுக்கேற்ப மாதம் ரூ. 20,000 முதல் ரூ. 30,000 வரை ஊதியம் கிடைக்கும். மேலும், பயிற்சி பெறும்போது தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித் தேர்வராக தேர்ச்சி பெற்று 10 மற்றும் 12-ஆம் வகுப்பு சான்றிதழ்களையும் பெற முடியும். இதன் மூலம் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து, வேலை பார்த்துக்கொண்டே மேற்படிப்பைத் தொடரும் வாய்ப்பும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
தொழிற்பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் முழுவதும் இலவசம் என்பதோடு, மாதந்தோறும் ரூ. 750 உதவித்தொகையும் வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ‘தமிழ்ப் புதல்வன்’ மற்றும் ‘புதுமைப்பெண்’ திட்டங்களின் கீழ் கூடுதலாக ரூ. 1000 ஊக்கத்தொகை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி விலையில்லா மிதிவண்டி, சீருடை, காலணிகள், கருவிகள், இலவசப் பேருந்து வசதி மற்றும் சில நிலையங்களில் விடுதி வசதியும் அரசால் வழங்கப்படுகிறது.
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…
குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…
உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…