இந்திய ரிசர்வ் வங்கியில் சிவில் பிரிவில் 7 இடங்களும், எலெக்ட்ரிக்கல் பிரிவில் 4 இடங்களும் என மொத்தம் 11 இளநிலை பொறியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க அந்தந்த துறைகளில் டிப்ளமோ (65% மதிப்பெண்) அல்லது பட்டப்படிப்பு (55% மதிப்பெண்) முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ முடித்தவர்களுக்கு 2 ஆண்டுகளும், பட்டதாரிகளுக்கு 1 ஆண்டும் பணி அனுபவம் அல்லது பொதுத்துறை நிறுவன பயிற்சி அவசியமாகும்.
வயது மற்றும் ஊதியம்:
விண்ணப்பதாரர்கள் 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ஆரம்ப காலச் சம்பளமாக மாதம் ரூ. 47,700 வழங்கப்படும். இது தவிர ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி இதர சலுகைகளும் படிகளும் உண்டு.
தேர்வு முறை:
தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழித்திறன் தேர்வு (Language Proficiency Test) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு உள்ளூர் மொழி அறிவு இருப்பது கட்டாயமாகும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்தகட்ட சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் https://opportunities.rbi.org.in/ என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ. 600 நிர்ணயிக்கப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை). விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள் ஏப்ரல் 16, 2026; விண்ணப்பிக்கக் கடைசி நாள் மே 06, 2026 ஆகும்.
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…
கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…