தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகர் தான் ஜீவா. ஆசை ஆசையாய் மற்றும் தித்திக்குதே திரைப்படங்களில் லவ்வர் பாயாக வந்த ஜீவா அமீர் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ராம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகர் என்று ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்தார். இதனைத் தொடர்ந்து டிஷ்யூம், பொறி என ஒரு பக்கம் கமர்சியல் படங்களில் நடித்தாலும் அப்படியே ஈ மற்றும் கற்றது தமிழ் என நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் ஜீவா நடித்து வந்தார்.
குறிப்பாக சிவா மனசுல சக்தி திரைப்படத்திற்கு பின்னர் மிகப்பெரிய நடிகராக தமிழ் சினிமாவில் வளம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் தேர்வு செய்த சில படங்கள் அவருக்கு பெரிதாக எதுவும் கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி மற்றும் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் திரைப்படங்களின் தோல்வியை பற்றி ஜீவா ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், முகமூடி படத்தின் இரண்டாம் பாதி ரொம்பவே லேக் ஆக இருப்பதாக மிஸ்கினிடம் சொன்னேன்.
ஆனா நான் அத சொன்னதுக்கு அப்புறம் அவர் போன் பண்ணா கூட எடுக்க மாட்டாரு. இது என் கிரியேஷன் இதுல எப்படி நீ உள்ள வரலாம்னு சொன்னாரு. சரி நான் வேற படத்துல பாத்துக்குறேன் விட்டுட்டேன். அதனைப் போலவே கௌதம் சாரும் அப்படித்தான், என்னதான் நம்ப இப்படி எல்லாம் மாத்தலாம் என்று சொன்னாலும் அவங்க இஷ்டத்துக்கு தான் படம் எடுப்பாங்க. சரி அவங்க தான் இயக்குனர் அப்படித்தான் நாம் நடிக்கணும்னு நானும் விட்டுடுவேன் என்ற ஜீவா வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…