Categories: சினிமா

தமிழ் சினிமாவில் நடித்த முதல் படம்… தியேட்டரில் பார்க்க விடாமல் வெளிய அனுப்பப்பட்ட ஜெயலலிதா…

Spread the love

மைசூர் சமஸ்தானம் மாண்டியா மாவட்டத்தில் மேல்கோட்டை என்ற ஊரில் பிறந்தவர் ஜெயலலிதா. இவரது இயற்பெயர் கோமளவல்லி என்பதாகும். என்னதான் மைசூரில் பிறந்தாலும் இவரது மூதாதையார்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவருக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே இவரின் தந்தை காலமானார். அதற்கு பிறகு திரைப்படத்தில் நடிக்க வந்த ஜெயலலிதாவின் தாயார் தனது பெயரை சந்தியா என வைத்துக்கொண்டு சென்னைக்கு குடிபெயர்ந்தனர்.

பள்ளி படிப்பை முடித்த உடனேயே ஜெயலலிதாவுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் கல்லூரிக்கு சென்று படிக்காமல் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்கு தமிழ்நாட்டில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. மொத்தமாக 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதுவும் இவர் எம்ஜிஆர் உடன் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் தான். எம்ஜிஆர் உடன் 28 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார் ஜெயலலிதா.

மேலும் சிவாஜி கணேசன் ஜெய்சங்கர் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார் ஜெயலலிதா. எம்ஜிஆர் அரசியல் கட்சி ஆரம்பிக்கவே அவர் கட்சியில் இருந்து ஜெயலலிதா எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அவரது கட்சியை எடுத்து நடத்தி வெற்றிகரமாக தமிழகத்தின் முதலமைச்சராக ஆறுமுறை பதவி வகித்தவர்.

சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி மக்களின் ஆதரவை முழுமையாக பெற்றவர் ஜெயலலிதா. குறிப்பாக பெண்கள் ஆதரவு அவருக்கு அதிகமாக இருந்தது. ஏனென்றால் பெண்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தினார் ஜெயலலிதா. இவரை புரட்சி தலைவி என்றும் அம்மா என்றும் அழைத்தானர். அப்படி ஜெயலலிதா சினிமாவுக்கு வந்த புதிதில் நடந்த சம்பவம் ஒன்றை பார்ப்போம்.

ஜெயலலிதா முதன் முதலில் நடித்த திரைப்படம் வெண்ணிற ஆடை. இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு 17 வயது தான். இந்த படத்தில் அதிகமாக கவர்ச்சி இருந்ததால் அந்த காலத்தில் A Certificate கொடுத்திருக்கின்றனர். 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் படம் பார்க்க முடியாது. அப்படி படம் ரிலீஸ் ஆன பின்பு ஜெயலலிதா படம் பார்க்க ஆவலோடு தியேட்டருக்கு சென்று இருக்கிறார். அப்போது இவருக்கு 17 வயது தான் என்பதால் இவரை தியேட்டருக்கு உள்ளே அனுமதிக்க வில்லை. முதல் படத்தையே தியேட்டரில் பார்க்க முடியாமல் வருத்தத்துடன் திரும்பி வந்திருக்கிறார் ஜெயலலிதா.

admin

Recent Posts

“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 எப்போது?”…. மௌனம் கலைத்த அமைச்சர் நிர்மல் குமார்… பட்ஜெட்டுக்கு பின் காத்திருக்கும் ட்விஸ்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைத்துள்ள நிலையில், முதல் ஒரு வாரத்திலேயே பல்வேறு…

14 minutes ago

“1993 நரசிம்ம ராவ்… 2026 விஜய்?”… தமிழக அரசியலில் அடுத்த ‘சிபிஐ’ அணுகுண்டு… இன்பதுரை போட்ட அந்த ஒரு ட்வீட்….!

தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகளைப் பெற்று தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைமையிலான அரசு வெற்றி…

20 minutes ago

அதிமுகவிலிருந்து ‘அவுட்’… தவெக-வில் ‘இன்’… கோட்டையை ஆளப்போகும் அந்த 7 விக்கெட்டுகள் யார்?… ராஜ்பவனுக்கு போகும் அந்த ‘லிஸ்ட்’…!

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சட்டமன்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிலும் வெற்றி…

25 minutes ago

BREAKING: “தமிழக அமைச்சரவையில் விஜய் செய்யும் மாஸ் சம்பவம்”… 1967-க்கு பிறகு நடக்கப்போகும் அந்த வரலாற்றுச் சம்பவம்…!

தமிழக அமைச்சரவையில் சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு கதர் ஆடை அணிந்த இரண்டு காங்கிரஸ் அமைச்சர்கள் இடம்பெறப் போவதாக காங்கிரஸ்…

29 minutes ago

இனி ஒரு கீறல் கூட விழாது… CM விஜய் பார்த்து பார்த்து வாங்கிய 5050 கார்…. வாயடைக்க வைக்கும் மிரட்டலான தொழில்நுட்பம்….!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்து, மே 10, 2026 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், தனது…

35 minutes ago

“அதிமுகவில் அடுத்த பிளவு?”…. சி.வி.சண்முகத்தின் டெல்லி ரகசிய பயணம்.. இபிஎஸ்-க்கு காத்திருக்கும் செக்… உடைத்த பகீர் உண்மை….!

தமிழக அரசியலில் அதிமுக உட்கட்சி பூசல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டி தற்போதைய…

40 minutes ago