நொடிப்பொழுதில் நடந்த கோர விபத்து… வேகமாக வந்த கார் மோதி ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்… பதை பதைக்க வைக்கும் வீடியோ…!

By Nanthini on நவம்பர் 17, 2025

Spread the love

உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி நகர் பகுதியில் நடந்த ஒரு பயங்கர விபத்து குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜான்சி நகர் பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையை கடக்க முயன்ற ஸ்கூட்டருடன் நேருக்கு நேர் மோதிய கொடூர மோதல் குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. கார் ஓட்டுநர் மற்றொரு இரு சக்கர வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த ஸ்கூட்டருடன் மோதி விபத்து நேர்ந்ததால் ஹெல்மெட் அணிந்திருந்த இருவரும் பல அடிகள் தூரம் காற்றில் வீசப்பட்டனர். இந்த சம்பவம் குறித்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த விபத்துக்கு பிறகு கார் ஓட்டுநர் நின்று உதவி செய்யாமல் சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்று விட்டார். அருகில் இருந்த மக்கள் உடனடியாக ஓடி வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய வாகனத்தையும் ஓட்டுனரையும் கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.