Categories: CINEMA

தொடர்ச்சியாக தோல்வி படங்கள்.. ஆப்பு வைத்த மாமியார்.. விவாகரத்துக்கு இதான் காரணமா இருக்குமோ..?

பிரபல நடிகர் ஆன ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய போவதாக இணையத்தில் செய்திகள் உலா வருகிறது. ஆனால் இது குறித்து ஜெயம் ரவி ஆதி தரப்பிலிருந்து எந்த பதிலும் வராததால் ஒருவேளை விவாகரத்து செய்தி உண்மையாக இருக்குமோ என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதற்கு ஏதுவாக ஆர்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில் ஜெயம் ரவியுடன் எடுத்த புகைப்படங்களை நீக்கிவிட்டார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு ஜெயம் ரவி ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்துக்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. ஜெயம் ரவி ஜெயம் படத்தில் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி முன்னணி நடிகராக வலம் வந்தார்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் மார்க்கெட் மேலும் உயர்ந்தது. ஆனால் சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இறைவன், சைரன் ஆகிய படங்கள் மக்களிடையே வரவேற்பை வரவில்லை. இதில் சைரன் படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். அந்த படம் தோல்வியை சந்தித்தது. சுஜாதா விஜயகுமார் பல சீரியல்களையும், படங்களையும் தயாரித்து வருகிறார்.

அடுத்தடுத்த பட தோல்வியால் ஜெயம் ரவியின் மார்க்கெட் தற்போது சரிய ஆரம்பித்துள்ளது. இதற்கு காரணம் ஜெயம் ரவி மாமியார் தான் என கூறப்படுகிறது. ஏனென்றால் ஜெயம் ரவியின் கால்ஷீட், அவர் நடிக்கும் படங்கள் என அனைத்தையும் சுஜாதா விஜயகுமார் தான் மேனேஜ் செய்வதாக கூறப்படுகிறது. ஜெயம் ரவி தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள், கதைக்களம் தற்போது சரியாக அமையவில்லை. முக்கியமாக தக் லைப் படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவி நடிக்கவில்லையாம். படங்களுக்கு கால்ஷீட் கொடுப்பது, கதை களத்தை தேர்ந்தெடுப்பது, படம் தயாரிப்பது, சம்பளம் கொடுப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஜெயம் ரவிக்கும் அவரது மாமியார் சுஜாதா விஜயகுமாருக்கும் இடையே பல மனக்கசப்புகள் இருக்கிறதாம். இதுவும் ஜெயம் ரவியின் விவாகரத்துக்கு ஒரு காரணமாக இருக்குமோ என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். எது எப்படி இருந்தாலும் இரு தரப்பினரும் பதில் அளித்தால் தான் எது உண்மை என்பது தெரியவரும்.

Priya Ram
Priya Ram

Recent Posts

குடும்பத்தினருடன் சென்று பல லட்சம் மதிப்புள்ள காரை வாங்கிய பிக் பாஸ் அர்ச்சனா.. வைரலாகும் வீடியோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகப் பிரபலமான நடிகை அர்ச்சனா, தற்போது புது கார் ஒன்றை வாங்கி இருக்கின்றார். தமிழ்…

2 மணி நேரங்கள் ago

பொண்ணு மாப்புள ஜோரு, ஒண்ணா சேருது பாரு.. கலைக்கட்டிய நடிகை வரலட்சுமியின் திருமணம்.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சரத்குமாருக்கு வரலட்சுமி என்ற மகள் உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா…

3 மணி நேரங்கள் ago

மஞ்சள் நிற உடையில், கவர்ச்சியில் தாராளம் காட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சின்னத்திரையில் பிரபலமாக இருந்த நடிகை காவியா அறிவுமணி வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில்…

6 மணி நேரங்கள் ago

திருமணமாகி 6 நாள் தான் ஆச்சு.. அதற்குள் கணவருடன் மருத்துவமனைக்கு வந்த நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

திருமணமான 6 நாளில் சோனாக்ஷி சின்ஹா தனது கணவருடன் மருத்துவமனை சென்ற நிலையில் ரசிகர்கள் பலரும் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா?…

6 மணி நேரங்கள் ago

விஜய் கண்டிப்பா அதை விடனும்.. எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றும் சுசித்ரா..!!

பிரபல பாடகியான சுசித்ரா எப்போதும் நடிகர் நடிகைகள் பற்றி தனது கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்துவார். கடந்த சில நாட்களுக்கு…

7 மணி நேரங்கள் ago

விட்டதை பிடித்து வசூலில் கம்பேக் கொடுத்த கல்கி 2898 AD.. 3-வது நாளில் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி திரைப்படம் 3-வது நாளிலும் 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.…

7 மணி நேரங்கள் ago