சென்னையை அடுத்த குரோம்பேட்டை சுந்தரம்மாள் காலனியைச் சேர்ந்த 53 வயது முன்னாள் தனியார் நிறுவன அதிகாரி ஒருவருக்கு, ஆபாச டேட்டிங் செயலி மூலம் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கஞ்சன் லதா சிங் (48) என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாட்ஸ்அப்பில் பேசி பழகிய நிலையில், கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஆலந்தூரில் உள்ள ஒரு சொகுசு விடுதிக்கு அந்தப் பெண் மற்றொரு தோழியுடன் அவரை அழைத்துள்ளார்.
அங்கு சென்ற அந்த நபர், இரண்டு பெண்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இதில் அவருக்குக் கடும் போதை ஏறவே மயங்கித் தூங்கியுள்ளார். நள்ளிரவில் கண்விழித்துப் பார்த்தபோது, அவருடன் இருந்த இரண்டு பெண்களும் அங்கிருந்து மாயமாகியிருந்தனர். மேலும், அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ரூ.4,000 ரொக்கப் பணத்தையும் அந்தப் பெண்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் பரங்கிமலைக் குற்றப்பிரிவு போலிஸில் அளித்த புகாரின் பேரில், தனிப்படை போலிஸார் பெங்களூரு விரைந்து சென்று கஞ்சன் லதா சிங்கை அதிரடியாகக் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். விசாரணையில், இவர் இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் டேட்டிங் ஆப் மூலம் ஆண்களைச் சொகுசு விடுதிகளுக்கு வரவழைத்து, போதை ஏற்றி நகைகளையும் பணத்தையும் சுருட்டி வந்த கில்லாடிப் பெண் என்பது அம்பலமானது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்தப் பெண் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள மற்றொரு பெண்ணைப் போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…