Categories: சினிமா

இப்டி கூப்பிட்டு ஏமாத்திட்டீங்களே.. புலம்பிய ரசிகர்.. மன்னிப்பு கேட்ட ஜெயம் ரவி.. நடந்தது என்ன..?

Spread the love

மணிரத்தினம் இயக்கிய பொன்னின் செல்வன் படத்தில் நடித்த பிறகு ஜெயம் ரவி மீண்டும் பிஸியான நடிகராக மாறிவிட்டார், அப்படத்திற்கு பின்பு இவருக்கு படம் மேல் படம் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. தற்போது, நடிகர் ஜெயம் ரவி நடித்த ’சைரன்’ என்ற திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதை அடுத்து இந்த படம் அவருக்கு ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ‘சைரன்’ வெளியான முதல் நாளில் ஜெயம் ரவி மதுரைக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்தார் என்பதும் அது மட்டும் இன்றி மதுரை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் செல்பி எடுத்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜெயம் ரவியுடன் செல்பி எடுக்க முடியாத ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் ஜெயம் ரவியுடன் கோபித்துக் கொண்டுள்ளார். ’உங்களுடன் செல்பி எடுக்க வேண்டும் என்று மிகவும் ஆவலுடன் இருந்தேன், ஆனால் முடியவில்லை, உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் செல்பி எடுத்துக் கொண்டு, என்னை அனுப்பி விட்டீர்கள், இது எனக்கு மிகவும் மோசமான நாள், உங்களிடம் இருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை’ என்று தனது சமூக வலைத்தளத்தில் வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள ஜெயம் ரவி ’மன்னிக்கவும் பிரதர், எல்லோரோடும் சேர்ந்து 300 செல்பிக்கும் மேல் எடுத்தேன், உங்களுடன் செல்பி எடுப்பதை நான் எப்படி தவற விட்டேன் என்று தெரியவில்லை, சென்னைக்கு வாருங்கள், செல்பி கிளிக் செய்வோம், வெறுப்பு வேண்டாம், அன்பை பரப்புங்கள்’ என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அந்த ரசிகர் தன்னுடைய பதிவை நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ranjith Kumar

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

3 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

3 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

3 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

4 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

4 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

4 மணத்தியாலங்கள் ago