#image_title
ஜெயம் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்த நடிகர் கோபிச்சந்த் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் ஒரு சில திரைப்படங்களில் நடித்துவிட்டு பின்னர் காணாமல் போய்விடுகிறார்கள். இருப்பினும் தன்னுடைய நடிப்பின் மூலமாக மக்கள் மத்தியில் தற்போது வரை ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பார்கள். அந்த நடிகரை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அப்படி ஒரு நடிகர் தான் கோபிசந்த்.
இயக்குனர் மோகன்ராஜ் இயக்கத்தில் அவரின் தம்பி ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயம் . இந்த படத்தில் ரவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். ஜெயம் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்தார். அதே திரைப்படத்தின் மூலமாகத்தான் சதாவும் சினிமாவிற்கு அறிமுகமானார்.
ஜெயம் ரவிக்கு இணையாக அப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் கோபிசந்த் பேசப்பட்டிருப்பார். மிரட்டல் வில்லனாக நடித்த இவரை இன்றளவும் யாராலும் மறக்க முடியாது. இப்படத்தின் வெற்றிக்கு இவரின் நடிப்பும் ஒரு காரணம் என்று கூறலாம். ஜெயம் படத்திற்கு பிறகு இவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை .
தமிழில் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த இவர் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார், தெலுங்கில் பல படங்களில் வில்லனாக நடித்த இவர் பின்னர் ஹீரோவாகவும் நடித்து வந்தார். பல ஆக்சன் திரைப்படங்களின் நடித்து ஹிட் பட நடிகராக வலம் வரும் இவர் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கலக்கி வருகின்றார். இவரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரா இவர் என்று கூறி வருகிறார்கள்.
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில், சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நபர் ஒருவரைப் பெண்மணி…
பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…