தான் முத்தக்காட்சியில் நடித்ததாக எழுதிய பத்திரிக்கையாளர்.. ஒரே கடிதத்தால் மிகப்பெரிய செய்தி நிறுவனத்தையே அலறவிட்ட ஜெயலலிதா..!

Spread the love

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் 140க்கும் அதிகமான படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜெயலலிதா. 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 தேதி பிறந்த இவர் முதன்முதலாக ஆங்கில திரைப்படத்தில் நடித்திருந்தார். 1965 ஆம் ஆண்டு வெண்ணிற ஆடை தான் ஜெயலலிதாவின் முதல் திரைப்படம். அந்த ஆண்டிலேயே வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் தான் ஜெயலலிதாவை தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆளாக மாற்றியது.

இந்த படம் தான் எம்ஜிஆர் -ஜெயலலிதா நடிப்பில் வெளியான முதல் திரைப்படம். தமிழ் சினிமாவின் சிறந்த ஜோடிகள் என்று அழைக்கப்பட்ட எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஜோடி தமிழில் மட்டும் 26 திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கின்றன. சிறந்த நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த பாடகியாகவும் வளம் வந்து இவர் அடிமைப்பெண் திரைப்படத்தில் ‘அம்மா என்றால் அன்பு’ உள்ளிட்ட பல பாடல்களைப் பாடி இருக்கின்றார்.

தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக நீடித்த ஜெயலலிதா டிசம்பர் 5, 2016 ஆம் ஆண்டு உயிரிழந்தார். முதல்வராக தமிழக மக்களுக்கு பல நன்மைகளை செய்த ஜெயலலிதாவின் மறைவு பலரை துயரத்தில் ஆழ்த்தியது. முதல்வராக இருந்தபோது எப்படி தனக்கு எதிர்வரும் பிரச்சனையை தைரியமாக எதிர்த்து நின்று சமாளிப்பாரோ, அதேபோல தான் சினிமா துறையிலும் இருந்திருக்கின்றார்.

அப்படி ஒரு சம்பவத்தை தான் சித்ரா லட்சுமணன் தனது பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார் அதாவது நடிகை ஜெயலலிதா நடிக்க தொடங்கிய காலத்திலேயே முத்த காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டாராம். பொதுவாக சினிமாவில் முத்த காட்சிகளை ஒரு ட்ரிக் வைத்து எடுப்பார்கள், அதாவது தனித்தனியாக நின்று எடுத்துவிட்டு அதனை எடிட்டிங்கில் மாற்றி விடுவார்கள்.

இப்படி இருக்கையில் ஒரு பத்திரிக்கை நிறுவனம் நடிகை ஜெயலலிதா முத்தக்காட்சியில் நடித்ததாக தனது பத்திரிக்கையில் தாறுமாறாக எழுதியிருந்தது. இதை பார்த்து கொந்தளித்த ஜெயலலிதா உடனே அந்த நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை எழுதுகிறார். அதில் நான் அந்த திரைப்படத்தில் முத்தக் காட்சியில் நடித்திருப்பதாக நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.

நான் ஏற்கனவே திட்டவட்டமாக கூறிவிட்டேன் முத்த காட்சியை நடிக்க மாட்டேன் என்று அப்படி இருக்கும்போது நான் எப்படி அந்த படத்தில் முத்தக் காட்சியில் நடிப்பேன். நீங்க அப்படி எழுதியதும் நான் அந்த படத்தை மீண்டும் மீண்டும் போட்டு பார்த்தேன். எந்த இடத்திலும் நான் உதடோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பது போன்ற எந்த காட்சியும் இடம் பெறவில்லை. அப்படி இருக்கும் போது நீங்கள் எப்படி பத்திரிகையில் இப்படி எழுதலாம். எனக்கு இது மிக சங்கடத்தை கொடுக்கின்றது.

இது வேறு பத்திரிகை என்றால் நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் மக்கள் விரும்பி படிக்கும் உங்கள் பத்திரிக்கையில் நீங்கள் இப்படி எழுதலாமா? அதனால் உடனடியாக எனது மறுப்பை வெளியிடுங்கள் என்று எழுதியிருந்தார். இதைப் பார்த்த அந்த பத்திரிகை நிறுவனம் உடனடியாக ஜெயலலிதாவின் கடிதத்தை பகிர்ந்து இருந்தது. அந்த பத்திரிக்கை எதுவென்றால் ஆனந்தம் என்கின்ற பத்திரிகை தான்.

Mahalakshmi

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

7 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

7 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

7 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

7 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

7 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

8 மணத்தியாலங்கள் ago