ஜனநாயகன் ரிலீஸ்… நாளைய முதல்வர் விஜய்…. செங்கோட்டையன் எச்சரிக்கை…!

By Nanthini on தை 7, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. குறிப்பாக விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சி மூலம் தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக மாற்றி உள்ளார். அதே சமயம் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படம் வருகின்ற ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தோடு விஜய் சினிமாவை விட்டு மொத்தமாக விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதனால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் செய்யும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக செங்கோட்டையன் கூறியுள்ளார். தணிக்கை சான்றிதழ் சிக்கல் குறித்த கேள்விக்கு அவர், ஜனநாயகன் படத்திற்கு சிக்கல் ஏற்படுத்தக் கூடியவர்களுக்கு அது எந்த விதத்திலும் வலு சேர்க்காது என்றும் நாளைய முதல்வர் விஜயின் படத்தை தடுப்பது சரியல்ல என்றும் தெரிவித்துள்ளார். அப்படி யாராவது நினைத்தால் அது அவர்களுக்கு பாதகமாக முடியும் என்றும் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.