Categories: சினிமா

அடம் பிடித்த ஹீரோயின்ஸ்.. பிரபல பாடகி செய்த தவறால் ஜானகிக்கு கிடைத்த வாழ்க்கை..!!

Spread the love

பிரபல பின்னணி பாடகியான பி.சுசிலா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகைகளின் படத்தில் பி.சுசிலா பாடிய அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. மலர்ந்தும் மலராத, பாலும் பழமும், உன்னை கண் தேடுதே உள்ளிட்ட பாடல்கள் பி.சுசிலாவை திரைத்துறையில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

கடந்த 1969-ஆம் ஆண்டு அகில இந்திய பாடகிக்கான பரிசு சுசிலாவுக்கு தான் வழங்கப்பட்டது. கடந்த 1957-ஆம் ஆண்டு டாக்டர் மோகன் ராவை சுசிலா திருமணம் செய்து கொண்டார். பி.சுசிலாவின் பாடலை கேட்டு மயங்காதவர்கள் இருக்கவே முடியாது. கதாநாயகிகள் தங்களது படங்களில் சுசிலாதான் பாட வேண்டும் என்று கூறும் அளவு அவர் புகழின்  உச்சிக்கு சென்றார்.

நாட்கள் செல்ல செல்ல தனக்கான மார்க்கெட் உயரியதால் சுசிலா சம்பளத்தையும் சற்று உயர்த்தி கேட்டுள்ளார். இந்நிலையில் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் கடந்த 1962-ஆம் ஆண்டு சுமைதாங்கி படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ஜெமினி கணேசன், தேவிகா உள்ளிட்ட பலர் நடித்தனர். சுமைதாங்கி படத்தில் பாடல் பாடுவதற்காக பி.சுசிலாவை ஸ்ரீதர் அழைத்தார். அவர் சம்பளம் சற்று அதிகமாக கேட்டதால் ஸ்ரீதர் தயக்கம் காட்டினார்.

அவர் இயக்குனராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்ததால் என்ன செய்வது என்று யோசித்தார். இதனால் பாடகி ஜானகியை சுமைதாங்கி படத்தில் இடம்பெற்ற பாடல்களை பாட வைத்தார். அந்த பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. சினிமாவை பொருத்தவரை ஒருத்தர் தவற விடும் வாய்ப்பு மற்றொருவருக்கு படிக்கட்டாக அமைகிறது. அப்படி தான் அடுத்தடுத்த வெற்றி பாடல்களை பாடி ஜானகியும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

admin

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

8 மணத்தியாலங்கள் ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

9 மணத்தியாலங்கள் ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

9 மணத்தியாலங்கள் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

9 மணத்தியாலங்கள் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

9 மணத்தியாலங்கள் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

10 மணத்தியாலங்கள் ago