நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை தொடர்பான சட்டப் போராட்டம் தற்போது உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. இத்திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், இந்த உத்தரவிற்கு உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இடைக்காலத் தடை விதித்ததால், திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை. இதனை எதிர்த்து தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரோடக்ஷன்ஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஜனவரி 15-ம் தேதி (வியாழக்கிழமை) விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
சுமார் 500 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்னதான கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதியே வெளியாக வேண்டிய இந்தப் படம், தணிக்கை வாரியத்தின் தாமதத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனநாயகன் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் இன்று நல்லதொரு உத்தரவை வழங்கும் என காத்திருந்த விஜய் தரப்புக்கு மனு தள்ளுபடியானது அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால் பொங்கல் சினிமாவுக்கான ரேஸில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஜனநாயகன் படம் வெளியேறிவிட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் தங்களது சோகத்தை சமூகவலைத்தளத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் 20-ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
பீகார் மாநிலத்தில் பாம்பு பிடிக்கும் தொழிலாளி ஒருவர், தன்னை கடித்த பாம்பை அடையாளம் காட்டுவதற்காக மூன்று கொடிய விஷமுள்ள நாகப்பாம்புகளுடன்…
பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வரும் ஜெட்ரேலோ ஜேக்கப் என்பவர், காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தனது மனைவியைக் கொடுமைப்படுத்திவிட்டு, கள்ளக்காதலியுடன்…
தமிழகத்தில் போகி பண்டிகை நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட வேளையில், கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி வைஷ்ணவி செய்த…
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் சரத்குமார் தென் மாவட்டங்களில் உள்ள தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய…
தமிழக அரசியலில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த விவாதங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக,…