இதெல்லாம் நாடகம்….! இசை நிகழ்ச்சியில் சாமி ஆடுறாங்க…. எனக்கு சுத்தமா பிடிக்கல…. சூப்பர் சிங்கரை விமர்சித்த ஜேம்ஸ் வசந்தன்…!!

Spread the love

பிரபல இசையமைப்பாளரும்,  நிகழ்ச்சி  தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன், தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சிகளின் தரம் குறித்து வெளிப்படையாகத் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், பொதுவாகத் தனக்குத் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளை நடத்துவதில் பெரிய விருப்பம் இல்லை என்று கூறினார். காரணம், அவை பெரும்பாலும் சினிமா பாடல்களுக்கு ஒரு காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கின்றன என்று விமர்சித்தார்.

எனினும், விஜய் டிவியில் ஆரம்பத்தில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி குறித்துப் பேசும்போது, ஆரம்பகாலத்தில் சுமார் 10-15 வருடங்களுக்கு முன் அந்த நிகழ்ச்சி மூலம் பல தொழில்முறைப் பாடகர்கள் உருவாக்கப்பட்டதாகவும், அப்போது நடுவராக இருந்த அனந்து போன்றவர்கள் ஒவ்வொருவரையும் பட்டை தீட்டி வெளியே அனுப்பியதாகவும் பாராட்டியுள்ளார்.

ஆனால், இப்போதைய நிலைமை குறித்துக் கருத்து தெரிவித்த அவர், இந்த நிகழ்ச்சிகள் இப்போது வணிக ரீதியாக மட்டுமே நடத்தப்படுவதாகவும், ஒரு வட்டத்திற்குள் சிக்கிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

இப்போது நடக்கும் நிகழ்ச்சிகளில், இசைக்கும் நிகழ்ச்சிக்கும் சம்பந்தமே இல்லாமல் ‘பக்தி சுற்று’ என்று வைத்துச் சாமி ஆடுவது, அழுகைக் காட்சிகள், பொருத்தமற்ற உடைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவது தனக்குப் பிடிக்கவில்லை என்றும், இது வெறும் நாடகமாகவே நடக்கிறது என்றும் ‘சூப்பர் சிங்கர்’, ‘சரிகமப’ போன்ற நிகழ்ச்சிகளில் நடக்கும் நாடகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். ஜேம்ஸ் வசந்தனின் இந்த வெளிப்படையான விமர்சனம், தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளின் தரம் குறித்துத் தற்போது விவாதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Devi Ramu

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

10 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

10 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

10 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

10 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

10 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

11 மணத்தியாலங்கள் ago