Categories: சினிமா

நடிகர் சங்கம் பண்ணது துரோகம்.. சின்மயிக்கு நடந்த அநியாயம், அசிங்கத்தை பொறுத்துக் கொள்ள முடியாது.. பொங்கி எழுந்த ஜேம்ஸ் வசந்த்..!

Spread the love

அரசியலைப் போலவே சினிமாவிலும் ஒருவரை பிடிக்காவிட்டால் ஓரம் கட்டி விடுவார்கள். அதாவது சினிமா உலகிலும் அரசியல் உண்டு. சினிமாத்துறைக்கு வரக்கூடிய பெண்கள் பல வருடங்களாக பாலியல் தொல்லைகளை சந்தித்து வருகின்றனர். வாய்ப்பு வேண்டுமென்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்பதுதான் சினிமாவில் உள்ள நடைமுறை. இதற்கு சம்மதம் தெரிவிக்காவிட்டால் வாய்ப்பு கிடையாது. அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் வாய்ப்பு என்றால் வாய்ப்பே தேவையில்லை என்று பல பெண்கள் சென்று விடுகின்றனர். சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாக வாய்ப்புக்காக வேறு வழியில்லாமல் சம்மதம் தெரிவிக்கின்றனர். சினிமாவிலும் உள்ள எல்லா துறைகளிலும் இது நடைபெறுகிறது.

 

இன்று பெண் இயக்குனர்கள் கூட வந்து விட்டனர். ஆனால் பெண்கள் மீதான பாலியல் சீர்தல் என்பதை இன்னும் திரையுலகில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு பின்னணிப் பாடகி சின்மயி சிலர் தன்னிடம் பாலியல் சீண்டல் செய்ததாக புகார் கூறி அதிர வைத்தார். அவரைத் தொடர்ந்து பல பெண்களும் தாங்களும் பிரச்சனைகளை சந்தித்ததாக தைரியமாக சமூக வலைத்தளங்களில் மீ டூ என்ற ஹேஸ் டேக்கில் கூறினர். சினிமா உலகில் இருக்கும் பலர் இதில் சிக்கினார்கள். டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் தலைவர் மற்றும் நடிகர் ராதாரவி இதில் கோபமடைந்தார்.

அதனால் சின்மயி ஆண்டு சந்தாவை செலுத்தவில்லை என ஏதேதோ காரணத்தைக் கூறி அவரை சினிமாவில் பாடவும் பின்னணி குரல் பேசவும் தலைவிதித்தார். இது நடந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது வரை அந்த தடை நீக்கப்படவில்லை. இப்படியான நிலையில் தக் லைப் பட ப்ரொமோஷன் விழாவில் சின்மயி பாடிய முத்தமலை பாடல் பலராலும் ரசிக்கப்பட்டது. அதோடு இவ்வளவு இனிமையாக பாடும் சின்மையும் மீதான தடையை நீக்க வேண்டும் என அவருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சமீபத்தில் அளித்த பேட்டியில், அந்தப் பொண்ணு உண்மைய சொன்னது தவிர வேறு என்ன தப்பு பண்ணுச்சு. 18 ஆம் நூற்றாண்டு காலத்தில் இப்படி எல்லாம் நடந்தது என்று சொன்னால் ஓரளவுக்கு ஏத்துக்க முடியும்.

ஆனா இப்ப இருக்கிற 21 ஆம் காலகட்டத்திலும் இதுபோன்ற அநீதிகள் பெண்களுக்கு நடந்து கொள்வதை சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த காலகட்டத்தில் அவ்வளவு அநியாயம் அசிங்கம் நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது அந்த பொண்ணுக்கு பெரிய விரக்தி தான் ஏற்படும். எப்படியாவது ஏதாவது பண்ணி மக்களாகிய நாம் தான் சின்மயியை உள்ளே கொண்டு வர வேண்டும். அவங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு கொடுக்கவில்லை என்றாலும் எதிர்காமல் இருக்கலாம். தப்பு பண்ணிட்டு நல்லா இருக்காங்க. உண்மையை சொன்னவருக்கு இந்த தண்டனை. இதற்கு இன்று இருக்கும் நடிகர் சங்க தலைவர் ஆர் கே மணி ஏதாவது முயற்சி எடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் மக்களாக இறங்கி தான் இதில் வேலை செய்வார்கள் என்ற சின்மைக்கு ஆதரவாக ஜேம்ஸ் வசந்தன் குரல் கொடுத்துள்ளார்.

Nanthini

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

6 மணத்தியாலங்கள் ago

FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…

7 மணத்தியாலங்கள் ago

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…

8 மணத்தியாலங்கள் ago

அரசியலை கடந்த பாசம்..! சீமான் வீட்டுக்கு அண்ணனாகச் சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்..! நெகிழ வைக்கும் பின்னணி…!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…

8 மணத்தியாலங்கள் ago