#image_title
ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்திருந்த மிர்னா ஸ்டண்ட் காட்சியில் பயிற்சி எடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் 2016 ஆம் ஆண்டு பட்டதாரி என்ற திரைப்படத்தின் மூலமாக அதிதி மேனன் என்கின்ற பெயரில் அறிமுகமானவர்தான் மிர்னா. தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடித்து வந்த இவர் பின்னர் தனது பெயரை மிர்னா மேனன் என மாற்றிக்கொண்டார். நெல்சன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு மருமகளாக நடித்திருப்பார்.
இந்த திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர் டான்சிங் ரோசாக நடித்த சபீர் கல்லறக்கல் என்பவருக்கு ஜோடியாக பரத் மார்க் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படம் பிளாப் ஆனது. மலையாளத்தில் இவர் பிக் பிரதர் படத்தில் மோகன்லால் உடன் இணைந்து நடித்திருக்கின்றார்.
தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒரு முன்னணி இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றார். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வபோது தான் எடுக்கும் கிளாமரான புகைப்படங்களை இணையதில் பகிர்ந்து வருவார். சமீபத்தில் கூட கருப்பு நிற உடையில் வெளியிட்டிருந்த கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வந்தது.
அவரை ஏகப்பட்ட ரசிகர்கள் பாலோ செய்து வருகிறார்கள். இந்நிலையில் ரசிகர்கள் பலரும் வியந்து பார்க்கும் அளவிற்கு பல வித்தைகளை காட்டி அசத்தி வருகின்றார் .சமீபத்தில் ஜோதிகா ஜிம்மில் ஜிம்னாஸ்டிக் வித்தை எல்லாம் காட்டி அசத்தியத்தை போல வெறித்தனமாக ஜிம்னாஸ்டிக் செய்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது ஸ்டண்ட் காட்சிக்காக விடாமல் பயிற்சி எடுத்து வருகின்றார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் ஏதோ ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக தான் இப்படி ஸ்டண்ட் பயிற்சியெல்லாம் எடுத்து வருகிறார் என்று கூறி வருகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ…
தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநரும், நடிகருமான ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் திடீர் மாரடைப்பால் காலமான செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகையும்,…
தமிழ் திரையுலகில் திரைக்கதை அமைப்பதில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்பட்டவர் இயக்குநர் கே.…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய நியமனம் உடனடியாக அமலுக்கு…
சென்னை தாம்பரம் அருகே உள்ள கழுகுமலை உச்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவிலில், குரங்குகள் சூழ்ந்து கொண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியிலும்…
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் இந்த காரசாரமான விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக…