“பாஜகவை சீண்டாதீங்க, நமக்கு இவங்க தான் டார்கெட்”… விஜய்யை திசை திருப்பிய அரசியல் பிரபலம்…. ஆடிப்போன தவெக தொண்டர்கள்….!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், தனது அரசியல் பயணத்தின் தொடக்கத்தில் ‘பாஜக எங்களது கொள்கை எதிரி’ என்று அறிவித்து பல்வேறு மேடைகளில் விமர்சித்து வந்தார். இதனால் அவர் மீது சிபிஐ விசாரணை மற்றும் அவரது திரைப்படங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் எனப் பல்வேறு சிக்கல்கள் எழுந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்நிலையில், விஜய்யின் சமீபத்திய அரசியல் நிலைப்பாட்டில் ஒரு மாற்றம் தென்படுவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் குடும்பத் திருமண விழாவில் விஜய் கலந்து கொண்டார். அப்போது இருவரும் அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சந்திப்பின் போது, தமிழக வெற்றிக் கழகம் ஒரு மாநிலக் கட்சி என்பதால், தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு பாஜகவை விமர்சிப்பதைக் குறைத்துக் கொள்ளுமாறு ஜெகன்மோகன் ரெட்டி விஜய்க்கு அறிவுரை வழங்கியதாகத் தெரிகிறது.

ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், தற்போது நடப்பது சட்டசபை தேர்தல் என்பதால் ஆட்சியில் இருக்கும் திமுகவை மட்டுமே பிரதானமாக விமர்சிக்க வேண்டும் என்றும், மற்றவர்களைப் பற்றிப் பேசத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார். இது அவர் தேசிய அரசியலை விட மாநில அரசியலில் மட்டும் கவனம் செலுத்தப் போவதைக் காட்டுகிறது.

இந்த வியூக மாற்றத்தின் பின்னணியில், தேர்தல் முடியும் வரை பாஜகவைச் சீண்டாமல் இருப்பது கட்சிக்கு நல்லது என்று விஜய் முடிவெடுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதன் மூலம் அரசு ரீதியான நெருக்கடிகளைக் குறைத்து, தங்களின் முழு கவனத்தையும் திமுகவிற்கு எதிரான தேர்தல் களத்தில் திருப்ப தவெக திட்டமிட்டுள்ளது உறுதியாகிறது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

5 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

5 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

5 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

5 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

6 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

6 மணத்தியாலங்கள் ago